இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் இளமையாக இருக்கும்போது மற்றவர்களின் மரியாதையை எவ்வாறு பெறுவீர்கள்? அவை உங்களுக்கு வேண்டாமா ! நீங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழுகிறீர்கள் மற்றும் உங்களுடைய குணாதிசயத்தை பொறுத்தே உரிய மரியாதையைப் பெறுகிறீர்கள். நம்மில் வயது முதிர்ந்தவர்கள், பண்பும் விசுவாசமும் கொண்ட இளைய கிறிஸ்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஆதரிக்க வேண்டும். நாம் அவர்களை ஊக்குவித்து, தேவனை கனப்படுத்த அவர்களின் விருப்பங்களைத் தூண்ட வேண்டும். நம்மில் இளையவர்களாக இருப்பவர்கள், நம்மை பார்த்து கேள்வி கேட்க முடியாத அளவுக்கு நாம் நற்சாட்சியுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் - நீங்கள் பரிபூரணமாக இருக்க மாட்டீர்கள், ஆனால் நீங்கள் இயேசுவுக்காக வாழ்வதில் வைராக்கியமுள்ளவர்களாக இருக்க முடியும். நாம் எந்த வயதை உடையவர்களாய் இருந்தாலும், நம் பண்பு, ஒழுக்கம், விசுவாசம் மற்றும் அன்பான இரக்கம் ஆகியவை இயேசுவின் சீஷர்களாகிய நமக்கு இன்றியமையாத பண்புகளாகும்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , எங்கள் சபையாகிய குடும்பத்தில் உள்ள இளம் வயதினர்கள் உம்முடைய நற்பண்புகளுக்காகவும் , மற்றபடி அவர்களை சுற்றியுள்ளவர்கள் உம்மை பிரிந்து வாழ அவர்களுக்கு அழுத்தம் தந்த போதிலும், ஆவிக்குரிய வாழ்க்கையை நேர்த்தியாக வாழ்ந்தவர்களுக்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். பிதாவே , விசுவாசத்தில் முதிர்ந்தவர்களுக்காகவும், எங்களுடைய தாலந்தை பயன்படுத்த எங்களுக்கு வாய்ப்பளித்தவர்களுக்காகவும், எங்கள் ஆவிக்குரிய வளர்ச்சியில் எங்களை ஊக்கப்படுத்தியவர்களுக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறேன். உம்முடைய மகிமைக்காகவும், உம் ராஜ்ஜியத்தின் வளர்ச்சிக்காகவும், வெவ்வேறு வயதினரிடையே எங்கள் திருச்சபையின் பணியிலும் நோக்கத்திலும் ஒற்றுமையாக வைத்திருக்க எங்களுக்கு உதவியருளும் . இயேசுவின் நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து