இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்கள் மிக முக்கியமான மூலதனம் என்ன; உங்கள் பணமா ? அல்லது குணமா ? இந்த கேள்வி உங்களிடம் பல வழிகளில் கேட்கப்படும் என்று என்னால் உங்களுக்கு உறுதியளிக்க முடியும். நீங்கள் அதிகமாக பாதிக்கப்படும் போது எல்லா மோசமான வேளைகளிலும் அடிக்கடி கேட்கப்படும். மார்ட்டின் லூதர் ஒரு மனிதனால் கடைசியாக மாற்றப்படுவது அவனது பணப்பையாகும் என்று கூறினார். அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது. ஆம், ஒரு கஷ்டத்தில் கடினமான கேள்வி. சூழ்நிலைகள் மாறுவதற்கு முன்னதாக இப்பொழுதே நாம் ஒரு முடிவை எடுப்போம். தேவனும், அவருடைய இராஜ்யமும் , அவருடைய சித்தமும் , அவருடைய நீதியும் முதலாவதாக வருகிறது, சரிதானா ?

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே, சர்வசிருஷ்டிக்கும் எஜமானாரே, தயவு கூர்ந்து, அடியேனுக்கு நீதியின் மேல் நேசத்தையும் , தேவைக்கு அதிகமான மற்றும் தன்னலமான ஆசையின் மேல் வெறுப்பையும் கொடும். எப்பேர்ப்பட்டதான தீர்மானத்தாலும் திசைத்திருப்ப முடியாத முழு இருதயத்தோடு உமக்கு ஊழியஞ்செய்ய விரும்புகிறேன். உமக்கு மகிழ்ச்சியளிக்கிற உம்முடைய சித்தத்தின் படியே என்னுடைய தீர்மானங்களை எடுக்க தயவு செய்து எனக்கு உதவுங்கள். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து