இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

துதி என்பது நம் குணத்துடன் ஒன்றோடு ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளது . ஆகவே, நாம் தேவனை தொழுதுக்கொள்வதற்கு , நம் இருதயத்தின் நோக்கமும், நம் வாழ்க்கையின் முயற்சியும் அவருடைய சித்தத்தை அறிந்து,புரிந்து வாழ்கிறோம் என்ற உறுதியான ஆவலை காண்பிக்க வேண்டும். இதை நாம் ஒருபோதும் நிறைவாக செய்ய மாட்டோம் என்றாலும், அவருடைய மகிமைக்காக நாம் வாழ முற்படும்போது, ​​கிருபை நம்மை சூழ்ந்து கொள்ளுகிறது . ஆனால் ஆவிக்குரிய விஷயத்தில் அஜாக்கிரதையாய் அல்லது வேண்டுமென்றே பெலன் இல்லாதவர்களாய் இருந்து, அந்த கிருபையினால் மன்னிப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று எண்ணக்கூடாது.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , நான் உம்மைப் போல வல்லமையும்,ஞானமும், கனமும் உடையவனாக ஒருபோதும் இருக்க மாட்டேன் என்றாலும், குணாதிசயத்தில் உம்மைப் போல இருக்க வாஞ்சிக்கிறேன் . நான் உம்முடைய பரிசுத்த வேதத்தில் உம் சித்தத்தைத் தேடும்போதும், என் அனுதின வாழ்வில் கீழ்ப்படிதலைத் தேடும்போதும், என் கண்களைத் திறந்து, ஆவியின் மூலமாய் அடியேனை ஞானமுள்ளவனாக்கும் . என் பாவத்தை மன்னித்து, உம்முடைய சித்தத்தைச் முழு உறுதியுடனும் செய்ய , என் பாவத்தை அகற்றி, பரிசுத்தமான இருதயத்தை என்னில் உருவாக்கும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து