இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பிரிந்திருக்கும் நம் உலகிலே அவர் ஒரே சரீரமாக இருக்கிறார், அந்த கிறிஸ்து இயேசுவின் அன்பின் பிரசன்னத்திற்கு தேறினவர்களாக இருப்பதே விசுவாசிகளாகிய நம்முடைய இலக்காகும். இந்த சத்தியத்தைப் பேசினால் மட்டுமே சவாலான இலக்கை நாம் அடைய முடியும். வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது;....அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது- தேவனின் ஆவியால் ஏவப்பட்ட செய்தி (2 தீமோத்தேயு 3:16-17)- தேவனின் அன்பின் செய்தி (எபேசியர் 4:29-32). இயேசுவை நம் உலகிற்கு அனுப்பிய தேவனுடைய மாபெரிதான அன்பை, அந்த அன்பின் நற்செய்தியை எவ்வாறு தெரிவிக்க வேண்டும் என்று எதிர்நோக்குவோம் . (யோவான் 3:16-17) - அந்த அன்பை நாமே வெளிப்படுத்தி பகிர்ந்து கொள்ளாவிட்டால், அதை எவ்வாறு மற்றவருக்கு தெரிவிக்க முடியும்?

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள மற்றும் அன்புள்ள தேவனே , எனது பரிசுத்தமற்ற நோக்கங்கள் மற்றும் தெய்வபக்தியற்ற மனப்பான்மைகள் அனைத்தையும் மேற்கொள்ள எனக்கு உதவியருளும், இன்னுமாய் அவைகளை உம்முடைய அன்பினால் மூடி மறைத்துக்கொள்ளும் . அதைச் செய்ய, ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் சுத்திகரிப்பு மற்றும் உம்முடைய மறுரூபமாகும் பிரசன்னம் எனக்கு தேவை, எனவே தயவுசெய்து என்னை பரிசுத்தாவியினால் நிரப்பி, என் வாழ்க்கையில் ஆவியின் கனியை (கலாத்தியர் 5:22-23) என் சிந்தனையிலும், நடக்கையிலும் இருக்கும்படி செய்தருளும் . கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து