இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"கீழ்ப்படியுங்கள்" என்ற வார்த்தை பெரும்பாலும் நமது தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் நேர்மறையாக அல்லது எதிர்மறையாக பார்க்கப்படுகிறது. ஒருவர் நமக்கு பணிந்து சேவை செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் மற்றவருக்கு பணிந்து சேவை செய்வது என்பது கடினமானது மற்றும் சில சமயங்களில் திணிக்கும் வேலையாக பார்க்கப்படுகிறது .துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் அநேக நேரங்களில் சுயநலமாக இருக்கிறோம், மற்றவர்களுக்கு சேவை செய்யவோ அல்லது அடிபணியவோ விரும்புவதில்லை. இருப்பினும், பெருமையுள்ளவர்களுக்கும், பிறருக்கும் சேவை செய்ய விரும்பாத எவருக்கும் தேவனானவர் எதிர்த்து நிற்க்கிறார் , குறிப்பாக அந்த "மற்றவர்கள்" வயது முதிர்ந்த விசுவாசிகளாக இருப்பவர்கள் ! கீழ்ப்படிந்த வேலைக்காரனின் ஆடைகளை அணிவது எளிதானதா - நம் பிதாவானவர் நாம் தானாக முன்வந்து ஆவிக்குரிய ஆடைகளை அணிய வேண்டும் என்று விரும்புகிறார் - நாம் முழுமனதோடே மனத்தாழ்மையுடன் இப்படிப்பட்ட ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் "பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். " நம் அனுதின வாழ்வில் கீழ்படியும் ஆசிர்வாதத்தின் வாழ்க்கையை வாழ்வோம்!

என்னுடைய ஜெபம்

பிதாவே , வேதத்தில் பட்டியலிடப்பட்டுள்ள விசுவாசத்தின் பெரிய முன்னோடிகளுக்காக உமக்கு மிக்க நன்றி. மற்றவர்களுக்கு சேவை செய்த மற்றும் எனக்கு முன்மாதிரியாக ஒப்புவித்து வாழ்வதன் மூலம் மற்றவர்களுக்கு தங்கள் அன்பை வெளிப்படுத்திய விசுவாசத்தின் முன்னோடிகளுக்காக நன்றி. அவர்களுக்கு பெலனையும், ஆரோக்கியத்தையும் வழங்குங்கள். இப்போதும் , ​​பிதாவே , உமது பிள்ளைகள் அனைவருக்கும், குறிப்பாக உமக்கும், உம்முடைய ராஜ்ஜியத்திற்கும் உண்மையுள்ள சேவையில் பல வருடங்கள் வாழ்ந்தவர்களை ஆசீர்வதிக்கவும் அவர்களுக்கு ஊழியம் செய்யவும் என்னைப் பயன்படுத்துங்கள். இயேசுவின் கிருபையின் காரணமாகவும், அவருடைய நாமத்தின் மூலமாய் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து