இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் தன்னுடைய குமாரனை அனுப்பினாரென்று இவ்வுலகம் எப்படி அறிந்துக்கொள்ளும் ? நம் ஒருமைப்பாட்டின் மூலமா ? உண்மையாகவே தேவனானவர் நம்மை தம்முடைய பிள்ளைகளைப் போலவே அன்புகூருகிறார் என்று இந்த உலகம் எப்படி அறிந்துக் கொள்ளும் ? நாம் ஒற்றுமையுடன் இணைந்து வாழும்போது தானே. ஒற்றுமையென்றால் என்ன ? அது விவரிப்பதற்கு கடினமானது. ஒற்றுமையின் அடிப்படையானது தேவனின் சித்தத்திற்கு ஏற்ற சீரான தன்மை உள்ள ஒரு வாழ்க்கை, அப்படி வாழும்போது அவர் நம்மில் வாழ்வதைக் காணலாம்!ஆயினும், இந்த வகையான ஒற்றுமையை உலகம் காண வேண்டுமென்றால், நாம் ஒருவரோடொருவர் சுவிசேஷத்தின் நிமித்தமாக இணைந்துப் பணியாற்றும் விதத்திலும் , நமக்குள்ளான வேறுபாடுகளை கையாளும் விதத்திலும் , ஒரு குழுவாக உலக மக்களை தொடர்ந்து நடத்தும் விதத்திலும், நிச்சயமாக தேவனுக்கடுத்த காரியங்களில் நாம் ஒன்றுபடும் விதத்திலும் நம் ஒற்றுமையை வெளிப்படுத்தலாம். இவைகளால் மாத்திரமே அப்படியாகும் !

என்னுடைய ஜெபம்

பிதாவே, உம்மை மேன்மைப் படுத்தும் வழிகளில் ஒன்றிணையவும் , உம்முடைய குணாதிசயத்தை வெளிப்படுத்தவும், மற்றவர்கள் இயேசுவே கர்த்தர் என்று அழைக்கும் வண்ணமாக வழி நடத்திச் செல்லவும் தயவுக் கூர்ந்து உம்முடைய பிள்ளைகளுக்கு உதவுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து