இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"முதிர்வயதுள்ள புருஷர்களுக்கு புத்தி சொல்லு ? "நான் இளையவர்களிடமிருந்து வாழ்க்கையைப் பற்றிக் கற்றுக்கொள்ள வேண்டுமா ? என சில முதிர்வயதுள்ளவர்கள் நினைப்பார்கள் என்று நான் எண்ணுகிறேன் , நீங்கள் என்னைக் கிண்டல் செய்கிறீர்களா !" பவுலானவர் இந்த செய்தியில் தலைமுறை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆழமான புரிதலையும் மரியாதையையும் வைக்கிறார். பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு புதிய இளைய தலைமுறையிடமிருந்து தேவனின் சத்தியத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்! மனித வரலாற்றில் முதன்முறையாக ஐந்து தலைமுறை கொண்ட மக்களுடன் நமது உள்ளூர் திருச்சபையில் பகிர்ந்து கொள்ளும் நம்மில் சிலருக்கு, பவுலின் சவாலான வார்த்தைகள், தீத்து என்ற இளம் தேவ ஊழியருடன் பகிர்ந்துகொண்டதை விட இன்று நமக்கு இன்னும் அதிகமாக இருக்கிறது. மாற்றம் மற்றும் புதுப்பித்தல் ஆகியவை அவர்களுக்கு நிலையானதாக இருக்க வேண்டுமானால், இளைய தலைமுறையினருக்கு நற்பண்புகள் கொண்ட தலைவர்களும் வழிகாட்டிகளும் தேவை. ஆயினும்கூட, தேவன் தம்முடைய சத்தியத்தை பேசுவதற்கும், அவருடைய மக்கள் சோம்பேறிகளாகவும், தங்கள் மனதின் யோசனையின்படி நடக்கிறவர்களுமாய் , இருக்கும் பட்சத்தில், புதுப்பித்தலைக் கொண்டுவருவதற்கு பெரும்பாலும் இளைய தலைமுறையினரை பயன்படுத்துகிறார் என்பதை முதியவர்கள் உணர வேண்டும். நாம் நம் காலத்தில் தேவனின் மக்களாக இருக்க முற்படுகையில், நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும், மதிக்க வேண்டும், ஜெபம் செய்ய வேண்டும், இதன் பொருள் தேவனுடைய குரலைக் கேட்கவேண்டுமானால் நாம் ஒருவருக்கொருவர் செவிசாய்க்க வேண்டும்!

என்னுடைய ஜெபம்

தேவனே , தயவுசெய்து எங்களுக்கு ஞானத்தையும், பொறுமையையும், கனத்தையும் கொடுங்கள். உம்முடைய குடும்பமாக, ஒவ்வொரு நபரையும் மதிப்பதற்கும், வயது வித்தியாசமின்றி நற்குணமும் முதிர்ச்சியும் உள்ளவர்களின் வார்த்தைகளுக்கு செவிசாய்த்து , நீர் யாரை கொண்டு பேசினாலும் உம் சத்தியத்திற்கு எங்களுடைய இருதயத்தைத் திறப்பதற்கு உம்முடைய உதவி எங்களுக்குத் தேவை. இயேசுவின் நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து