இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு பூமிக்கு வருவது முற்றிலும் பரிசுத்தமானது என்பதை கர்த்தராகிய ஆண்டவர் பழைய ஏற்பாட்டில் வெளிப்படுத்துகிறார். தேவன் உன்னதமும் , பரிசுத்தமும், நீதியும், மகத்துவமுமானவர். ஆயினும் கர்த்தராகிய ஆண்டவர் மாம்சத்திலே வெளிப்பட்டார். நம்முடைய தேவைகளைக் காண்கிற ஆண்டவர் , கூக்குரல்களைக் கேட்டு, நமக்கு உதவ இறங்குகிறார். விசேஷமாக அவருடைய அன்பும், கிருபையும் தேவைஎன்று அறிந்து வருகின்ற ஜனங்களை தேவன் நேசிக்கிறார். ஆர்வத்துடனும், மனத்தாழ்மையுடனும் , ஆச்சரியத்துடனும், பயபக்தியுடனும் அவரை தேடுவோருடைய ஆவியையும், இருதயத்தையும் தேவன் உயிர்ப்பிக்கிறார்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதாவே, என் மீது அன்பு வைத்து, இயேசுவின் வழியாய் வந்து என்னை மீட்டமைக்காக உமக்கு நன்றி. நான் மிகுந்த தாழ்மையுடன் கேட்பது என்னவென்றால், நீர் உம்முடைய ஆவியை என்னிலே வல்லமையாய் நிரப்பி, என் இருதயத்தை உயிர்ப்பித்து, என்னுடைய ஆவியை அசைத்து இன்றே என் வாழ்க்கையில் உமக்கு மகிமையாக ஊழியம்செய்து வாழ உதவிச் செய்யும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து