இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவுக்குள்ளாய் மன்னிப்பும் ,மீட்பும் கிடைக்கும்படி தேவன் நமக்காக பெரிய விலையை கொடுத்திருக்கிறார் என்று அறிவேன். நமக்கு மன்னிப்பை வாங்குவதற்கு அவர் இவ்வளவு பெரிய பிரயாசம் மேற்க்கொண்டாரென்று சொன்னால், அவர் நமக்காக எதை மறுப்பாரோ , அது நன்மையாகவும், நீதியாகவும், பரிசுத்தமாகவுமே இருக்கும். ஆகவே, தேவன் நம்முடைய ஜெபங்களுக்கு "இல்லை" என்று பதில் அளித்தால், பின்னர் அது நம் நன்மைக்காகவும், நாம் ஜெபித்தவருடைய நித்திய நலனுக்காகவும் இருக்கிறது. அவருடைய உள்நோக்கம் நம்மை ஆசிர்வதிப்பதே , காயப்படுத்துவதல்ல . அவருடைய விருப்பம் நம்மை மீட்டெடுத்து ஆசீர்வதிப்பது . நமக்கு நன்மைக்கேதுவாய் முடியும்படி காரியங்களை நடப்பிப்பதே அவருடைய வாஞ்சையாயிருக்கிறது ( ரோமர் 8:28) அவர் நம்மை அவருடைய நேச குமாரனைப் போல மறுரூபமாகச் செய்கிறார் (ரோமர் 8:29).

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , சில நேரங்களில் என் ஜெபத்திற்க்கு நான் விரும்பிய பதில் கிடைக்காதபோது பொறுமையிழந்து ஏமாற்றமடைகிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். என் சந்தேகமுள்ள இருதயத்தை அமைதிப்படுத்தி சமாதானப்படுத்தும். உமது செழிப்புள்ளக் கிருபையை குறித்து என் ஆவிக்கு தயவுக்கூர்ந்து நினைப்பூட்டும். உம்முடைய பரிசுத்த ஆவியானவரின் ஊழியத்தின் மூலம் உம் ஆறுதலையும் உறுதியையும் மனுஷனுடைய ஆவிக்கு கொண்டு வாருங்கள். என் வாழ்க்கையில் நடக்கும் கடினமான காரியங்களை நான் எப்போதும் புரிந்து கொள்ளாமல் இருக்கும்போதும் , உம்முடைய ஆசீர்வாதத்தையும் கிருபையையும் நீர் என்னிடம் கொண்டு வர விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன், எனக்கு நன்மையும் , உமக்கு மகிமையும் உண்டாவதற்காகவே நீர் அனைத்து கிரியையும் செய்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன் . இயேசுவின் நாமத்திலே. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து