இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அநேக நேரங்களில் நம்முடைய ஒவ்வொரு ஆவிக்குரிய வாழ்க்கையிலும் நம் சொந்த வளங்கள் மற்றும் பலங்களுக்காக மிகப் பெரிய சவால்களை எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது. செருபாபேல் அத்தகையச் சவாலை எதிர்கொண்டார். தேவன் அவரையும், நமது மிகப்பெரிய வெற்றிகள் அவர் மூலம் தான் நம் பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல என்பதையும் அவனுக்கு நினைவுப் படுத்த ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். நம் பலவீனத்தை விட தேவனின் வல்லமை பெரியது, நமது குறைவுகளைவிட தேவனின் பராக்கிரமம் அதிகம் என்று நாம் நம்பும்போது, தேவனுடைய பெரிய இரட்சிப்பின் நிகழ்வுகளில் இடம் பிடித்த மிகப் பெரிய வெற்றிகள் நமக்கும் ஏற்படும். நாம் ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டிய உண்மையான கேள்வி மிகவும் எளிது: நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், ஊழியத்தின் முயற்சியிலும், நாம் எங்கு நம்பிக்கை வைக்கிறோம், நமது தைரியத்தின் ஆதாரம் என்ன?இவைகள் நம்முடைய திறமையா, சாதுரியமா, அறிவா, பெலனா அல்லது தேவனுடையதா ?

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , சர்வவல்லமையுள்ள தேவனே , என் சொந்த பெலத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதற்காக அடியேனை மன்னியுங்கள். தேவனே எனக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள தடைகள், சவால்கள் மற்றும் வாய்ப்புகளால் மனச்சோர்வுடனும் , அதிக பயத்துடனும் இருப்பதற்காக என்னை மன்னியுங்கள்.பழைய ஏற்பாட்டில் உள்ள விசுவாசம் மற்றும் ஜெயத்தை பற்றிய உம்முடைய சிறந்த வரலாற்றின் மூலமாய் , உம் பெலன் எனக்குள்ளாயும், உம் சபையிலும், பரிசுத்த ஆவியைக் கொண்டு கிரியை நடப்பிக்கிறது என்று நம்புவதற்கு தயவுகூர்ந்து என்னைத் உற்சாகப்படுத்தும்படி கேட்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து