இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனானவர் மிகுந்த இரக்கமுள்ளவர் ஆம், தம்முடைய ஜனங்கள் அநியாயத்தினாலும் கலகத்தினாலும் நிறைந்த வேளைகளில் தேவன் அவர்கள் மீது மனம் நொந்து கோபமடைந்தவராய் இருந்த சில சந்தர்ப்பங்களை நாம் ஒருவேளை நினைவுக் கூரலாம். ஆனால், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அவர் இஸ்ரவேல் மக்களை வழிநடத்தி வந்த பாதையில் இவை அடிக்கடி நிகழாததால் நாம் இவைகளை துல்லியமாக நினைவில் கொள்கிறோம். நன்றியறிதல் இல்லாத மற்றும் மறதியுள்ள தம்முடைய மக்களிடம் கிருபையுடனும் மன்னிப்புடனும் தேவன் தனது இருதயத்தை நமக்குக் வெளிப்படுத்தினார் . தேவன் தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தில் நோய்வாய்ப்பட்ட, நொறுங்குண்ட , துக்கமடைந்த மற்றும் பாவமுள்ள மக்களைக் கையாளும்போது, ​​இயேசுவின் மூலமாய் தம் இரக்கமுள்ள இருதயத்தை நமக்கு வெளிப்படுத்தினார். நாம் பாவிகளாக இருக்கும் வேளையில், நம்மைத் தம் பக்கம் அழைத்து இரட்சிப்பைக் கொண்டு வருவதன் மூலம் தேவனானவர் தம்முடைய இரக்கத்தையும் அன்பையும் உங்களுக்கும் எனக்கும் வெளிப்படுத்தினார் (ரோமர் 5:5-11). அவர் நம்மை மாற்றாமலும், நம்முடைய பாவங்களால் நாம் அமிழ்ந்து போகவும் விடமாட்டார். ஆம், நம் வழிகளை மாற்றும்படி அவர் நம்மை அழைக்கிறார். எவ்வாறாயினும், வானத்தையும் பூமியையும் ஆளும் சர்வவல்லமையுள்ள தேவனின் உதாரத்துவ தன்மை , கிருபை மற்றும் அன்பு, நம்மை அவரிடம் கிட்டி சேரும்படி அழைத்து, அவருடைய மாறாத கிருபையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குவது ஒரு மேலான நன்மையாகும் - இதே தேவன் நம்மை இந்த அன்பு, கிருபை, இரக்கம் ஆகிய இவைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அழைப்பதில் எவ்வளவேணும் ஆச்சரியமில்லை. நாம் மற்றவர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கும்படி ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் (ஆதியாகமம் 12:1-3; 2 கொரிந்தியர் 9:10-15).

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , சாந்தமுள்ளவராகவும் அதே வேளை வல்லமை நிறைந்தவராகவும் , மன்னிப்பவராகவும் அதே வேளை நீதியுள்ளவராகவும், இரக்கமுள்ளவராகவும் அதே வேளை பரிசுத்தமுள்ளவராகவும் இருப்பதற்காக உமக்கு நன்றி. இந்த குணாதிசய பண்புகளில் என்னை முதிர்ச்சியடையச் செய்யுங்கள். நான் சுய நீதியுள்ளவனாக இருக்க விரும்பவில்லை, ஆனால் நீதியுள்ளவனாக இருக்க விரும்புகிறேன். நான் ஒரு கொடுமைக்காரனாக இருக்க விரும்பவில்லை, ஆனால் இரக்கத்திலே பெலனுள்ளவனாய் இருக்க விரும்புகிறேன், நான் பரிசுத்த தோற்றமுடையவனாய் இருக்க விரும்பவில்லை, ஆனால் அன்பாகவும் இரக்கமுள்ளவனாகவும் இருக்க விரும்புகிறேன். தயவு செய்து என்னை உம்முடைய பரிசுத்த ஆவியால் நிரப்பி, வளர்ச்சி மற்றும் மாற்றம் தேவைப்படும் பகுதிகளில் சாந்தமாய் வழிநடத்துங்கள் . மற்றவர்கள் உம்முடைய நீதியுள்ள குணம், கிருபை நிறைந்த இரக்கம் மற்றும் மெய்யான அன்பு இவைகளின் பிரதிபலிப்பைக் என்னில் காணட்டும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து