இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நான் பணக்காரர் இல்லை என்றும், சராசரி வருமானம் உடையவர் என்று நம்மை நினைத்துக் கொள்வது மிகவும் எளிது. எனவே, இயேசு ஒரு தையல் ஊசியின் ஓட்டை வழியாக ஒட்டகத்தின் பெரிய மூக்கையும் அதன் நீண்ட கால்களையும், பெரிய முதுகை குறித்ததான நகைச்சுவையைக் கூறுகிறார் . ( எருசலேம் சுவரில் ஒட்டகங்கள் கடந்து செல்ல வேண்டிய ஒரு வாயிலைப் குறித்து இயேசுவானவர் பேசவில்லை - அது இயேசுவுக்குப் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பெயரிடப்பட்டது!) அடிப்படை உண்மை? மின்னஞ்சலைப் படிக்க கணினி, தொலைபேசி அல்லது டேப்லெட்டை பயன்படுத்த முடிந்தால், உலத்தில் உள்ள அநேகரை விட நாம் பணக்காரர்களாக இருக்கிறோம். நமது நம்பிக்கை மற்றும் இரக்கத்திற்கு இடையூறாக நம் "பொருட்கள் " இருக்க அனுமதிக்க வேண்டாம். நமது ஒட்டகங்கள் நமது ஊசிகளின் காதின் வழியாகச் செல்ல தேவனானவர் உதவ விரும்புகிறார். நம்மிடம் இருப்பதெல்லாம் அவரிடமிருந்து கிடைத்த ஈவு என்பதையும், மற்றவர்களை ஆசீர்வதிக்கவும் அவரைக் கனப்படுத்தவும் அதைப் பயன்படுத்த அவர் விரும்புகிறார் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள அவர் விரும்புகிறார்.

என்னுடைய ஜெபம்

இரக்கமுள்ள பிதாவே , பணத்தை குறித்து கவலைப்படாமல் இருப்பது சில நேரங்களில் எனக்கு கடினமாக உள்ளது. நீர் எனக்கு பல நன்மைகளையும் சலுகைகளையும் வழங்கியுள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் அன்பான பிதாவே , நான் வைத்திருக்கும் பொருட்கள் என்னை அவைகள் சொந்தமாக்கி கொள்ள விரும்பவில்லை - அவை என்னை ஆட்கொள்ளுவதை நான் விரும்பவில்லை. என்னிடம் இல்லாததைப் பெற முயற்சிப்பதன் மூலம் நான் வழுவிப்போக விரும்பவில்லை. என்னை மகிழ்விப்பதற்காகவோ, சமூகத்தில் பொருத்தமாக இருப்பதற்காக அல்லது பாதுகாப்பாக உணருவதற்காக அற்பமான விஷயங்களை சம்பாதிப்பதை நான் விரும்பவில்லை. நீர் என்னுடன் கிருபையாய் பகிர்ந்து கொண்ட இரக்கம் , உதாரத்துவம் மற்றும் நன்றியுணர்வு ஆகியவற்றில் நான் ஐசுவரியவானாக இருக்க முற்படும்போது தயவுக்கூர்ந்து எனக்கு உதவியருளும் . இயேசுவின் நாமத்தினாலே , நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். ஆமென்..

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து