இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் கிறிஸ்தவர்களான போது, பரிசுத்தாவியினால் கழுவ மாத்திரம் படவில்லை, பரிசுத்த ஆவியாலே நிரப்பவும் படுகிறோம்.யோவானவர் இதை குறித்து பேசும்போது நம்முடைய அபிஷேகம் என்று குறிப்பிடுகிறார். ஆவியானவர் இயேசுவை குறித்ததான சத்தியத்தை கேட்க உதவுகிறார். இயேசுவினுடைய அடையாளத்தை மங்கச்செய்கிற கள்ள போதனைக்கு இந்தச் சத்தியம் நம்மை சரணடையாமல் தடுக்கிறது . இயேசு - நம்மோடிருக்கிறார், நேசிக்கிறார். இந்த இரண்டு விசேஷித்த சத்தியங்களை நாம் கடைப்பிடிக்கும்போது இயேசுவில் நிலைத்திருக்கிறோம்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், நீதியுமுள்ள பிதாவே, இயேசுவானவரை அனுப்பி என்னை மீட்டமைக்காக உமக்கு நன்றி. இயேசுவானவர், நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் என்பது ஆழ்ந்த பாராட்டுக்குரியதாகவும், வியப்பானதாகவும் உள்ளது. உம்முடைய குமாரனும் எனது இரட்சகருமானவரைப் பற்றிய சத்தியத்தை பாதுகாக்க உதவும்படி ஆவியானவரை எனக்காக அனுப்பியதற்காக நன்றி, அவருடைய நாமத்தினாலே நன்றிசெலுத்தி ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து