இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மனிதனுடைய இருதயத்தை சரிசெய்ய சிறந்த கருவி எது? ...மாற்று வழி இணைப்பறுவையா ( பை-பாஸ் அறுவை சிகிச்சை) ? ... குருதி குழாய்ச் சீரமைப்பா (ஆஞ்சியோபிளாஸ்டி) ? ... செயற்கை இதயமா? ... இருதய மாற்று அறுவை சிகிச்சையா ? ...தேவனுடைய வார்த்தை எப்படிப்பட்டது ? நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள், இந்த மற்ற நுட்பங்கள் மக்களின் சரீரப்பிரகாரமான இருதயத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்.ஆவிக்குரிய இருதய அறுவை சிகிச்சைக்கான தேவனின் கருவி அவருடைய வார்த்தையாய் இருக்கிறது. இந்த இருபுறமும் கருக்குள்ள பட்டயம் ஆவியையும் ஆத்துமாவையும் வகையருக்கிறதாயும் சரீரப்பிரகாரமான ஆசீர்வாதத்தைக் கொண்டு வருகிறதாயுமிருக்கிறது. ஆகவே நீங்கள் உங்களுடைய இருதயத்தின் எவ்வளவு பகுதியை தேவனுக்கென்றும், அவருடைய இருதயத்தை குணமாக்கும் வல்லமையுள்ள கருவியின் தொடுதலுக்கும் கொடுக்கிறீர்கள் ? தேவனுடைய வார்த்தையை திறந்து வாசிக்கும் போதும், தேவனுடைய செய்தி போதிப்பதைக் கேட்கும்போதும் , கற்றுக்கொடுக்கப்படும் காரியங்களை புரிந்துக் கொள்ளவும், உபயோகிக்கவும், நடைமுறையில் பயன்படுத்தவும் உதவவேண்டுமென்று பரிசுத்தாவின் ஒத்தாசையை கேட்போமா ? உலகத்திலுள்ள மாபெரிதான மருத்துவரிடத்தில் அவருடைய கிரியையை நம்மில் நிறைவேற்ற நம்முடைய இருதயத்தை அர்பணிப்போமாக.

என்னுடைய ஜெபம்

பரிசுத்த பிதாவே, உம்முடைய வேத வார்த்தைகளை திறந்து வாசிக்கும் போதும் , உம்முடைய வார்த்தைகளை போதிக்கும் போதும், கற்பிக்கும் போதும், பரிசுத்த ஆவியானவர் என்னுடைய இருதயத்தில் ஊடுருவி பாவங்களை குறித்து கண்டித்து உணர்த்தி, வளர வேண்டிய இடங்களில் அடியேனுக்கு அசௌகரியத்தையும் , இயேசுவைப் போல இருக்க வேண்டிய இடங்களில் உற்சாகம் பெற அடியேனை தட்டியெழுப்பவும் கேட்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து