இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் பாவத்திலிருந்து கழுவப்பட்டிருந்தால், ஞானஸ்நானத்தின் மூலம் கிறிஸ்துவுடன் மரித்திருந்தால், பரிசுத்த ஆவியால் முற்றிலுமாகவும் முழுமையாகவும் சுத்தப்படுத்தப்பட்டிருந்தால், தேவனுக்கென்றே வாழ்வோம்! நாம் பாவத்தையும், பாவத்தின் மீதான நமது விருப்பத்தையும் , நம்முடைய முழு பலத்தோடு எதிர்த்து நிற்போமானால் , பரிசுத்த ஆவியானவர் நம்மால் தன்னிச்சையாக எப்பொழுதும் வாழ முடிவதை விட மாபெரிதான நீதிக்கு நம்மை உட்படுத்துவார். ஒவ்வொரு நாளும் நமது பாவமான கடந்த காலத்திற்கு மரித்தோம் என்ற நினைவோடு , இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாக எண்ணி , தேவனின் குணாதிசயத்தை தரித்துக்கொள்ளவேண்டும் என்ற இலக்கை நோக்கி ஓடுவோம்!

என்னுடைய ஜெபம்

அன்பும், நீதியுமுள்ள பிதாவே, சர்வ வல்லமையுள்ள தேவனே, என் இதயம் உம்முடைய சித்தத்தை உறுதியாய் பற்றிக் கொள்ளவும் , உம் பரிசுத்த குணாதிசயத்துக்கும், கிருபைக்கும் முற்றிலும் இணக்கமாய் இருக்க உதவும்படி கேட்கிறேன். இரட்சகரும், ஆண்டவருமாகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து