இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒற்றுமை , இணக்கம் ஆகிய இவ்விரண்டும் தற்செயலானவை அல்ல! உள்நோக்கத்தாலும் , ஒப்புக்கொடுப்பதாலும் இவைகள் நிகழ்கின்றன. ஆனால் நாம் இருக்கும் நிலைகளை விட, அவை தேவனால் கட்டளையிடப்படுகின்றன. நம்மிடையே ஒற்றுமையும், இணக்கமும் எப்படி இருக்கிறது? நமது "சபையின் " வாழ்க்கைமுறையில் மூன்று கடமைகள் இருக்க வேண்டும் என்று பேதுரு நினைப்பூட்டுகிறார் - 1) துயரப்படுவர்களின் துக்கங்களையும் கவலைகளையும் தீவிரமாக பகிர்ந்து கொள்ளுங்கள்; 2) ஒரு நல்ல ஆரோக்கியமான குடும்பம் ஒவ்வொரு அங்கத்தினரையும் நேசித்து,மதிப்பது போல ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள்; மற்றும் 3) நம்மை காயப்படுத்தும் மற்றவர்களின் தோல்விகளைக் கையாளும் போது இருமாப்பாய் இருப்பதைக் காட்டிலும் இரக்கத்தைக் காண்பியுங்கள் , நாமும் பாவம் செய்யக் கூடும் , நாம் நேசிப்பவர்களை காயப்படுத்தவும் கூடியவர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .

என்னுடைய ஜெபம்

பிதாவே , கிறிஸ்துவுக்குள் உள்ள என் சகோதர சகோதரிகள் அடியேனை தகுதியுள்ளவனாக நடத்தாதபோது, ​​என் சுய உணர்ச்சியை நான் காயப்படுத்தி, புத்தியீனமாக நடந்துகொண்டேன் என்று ஒப்புக்கொள்கிறேன். நீர் சிருஷ்டித்தவர்களால் இயேசுவானவர் மிகவும் கோரமாகவும்,அவமானத்துடனும் நடத்தப்பட்டார் என்பதை நான் அறிவேன், எனவே காரியங்கள் எப்போதும் எனக்கு ஏற்றார் போல் அல்லது நன்றாக நடக்காதபோது நான் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஆனால் தகப்பனே, அன்பான மோதலால் என்னை காயப்படுத்துபவர்களுக்கு எப்போது சவால் விடுவது என்பதையும், எப்போது கொடுமைகாரர்களை புறக்கணிப்பது என்பதையும், இன்னுமாய் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் அநேக இடுக்கன்களிலே அவர்களுக்கு உதவி செய்யும் படியாகவும் , அப்படிப்பட்ட வழியை கண்டறியவும் எனக்கு உதவுங்கள். பிதாவே , உமது சமாதானம் , இணக்கம் , கிருபை , ஒற்றுமை ஆகியவற்றின் கருவியாக நான் இருக்கவேண்டும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து