இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் ஞானஸ்நானத்தில் இயேசுவின் நாமத்தை அறிக்கையிட்டு , அவர் நம்முடைய இரட்சகர் என்று விசுவாசித்து , பாவத்திற்கு மரித்தோம். இந்த மரணத்தில், நாம் இயேசுவின் மீதும், தேவனின் வல்லமையின் மீதும் விசுவாசம் கொண்டிருப்பதால், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருப்போம் (யோவான் 5:24; கொலோ. 2:12). மேலும், நம் வாழ்க்கை இயேசுவோடு ஒப்புரவாக்கப்படும் போது , அவருடைய மகிமையுள்ள எதிர்காலம் நமக்குரியதாகும் (கொலோ. 3: 1-4).நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறோம். கிருபையின் ஈவுக்கு ஆர்வத்துடனும், பரிசுத்தமாய் இருக்க வைராக்கியத்துடன் பதிலளிப்போம். நம்மை இயேசுவைப் போல மாற்றும் பரிசுத்த ஆவியின் மறுரூபமாக்கும் கிரியைக்கு நம்மைத் ஒப்புக் கொடுப்போம் (2 கொரி. 3:18). நாம் கிருபையின் பிள்ளைகள். நாம் பாவத்தின் அடிமைத்தனத்தில் இல்லை , கிருபையால் விடுவிக்கப் பட்டிருக்கிறோம். ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு தேவனுடைய செய்கையாயிருக்கிறோம் (எபே 2:1-10). பாவம் நம்முடைய எஜமானராக இருக்காது!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள ஆண்டவரே, பிதாவே , என் இதயத்தை சுத்திகரித்து , உம் கிருபைக்குப் புதியதாகவும், ஜீவனுள்ளதாகவும் , என்னை முன்னே ஆட்கொண்ட பாவத்திற்கு மரித்தவனாய் மாற்றுங்கள் .இயேசுவின் நாமத்திலே. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து