இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"அப்படியானால் நீங்கள் யாரைப் பிரியப்படுத்த முயற்சிக்கிறீர்கள்?" என் தகப்பனுடைய இந்த வார்த்தைகள் இன்னும் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது . அவருடைய கருத்து? நாம் தயவு செய்து இரண்டு பேரின் வார்த்தைகளுக்கு மாத்திரமே பிரியமுண்டாக நடக்க வேண்டும் : 1)பரலோகத்திலிருக்கிற நம்முடைய பிதா, ஏனென்றால் எல்லா மகிமையும், கனமும் அவருக்கே உரியது. 2) மற்றொன்று நாம் , ஏனென்றால் நாம் நம்மால் மிகச் சிறந்ததை செய்துள்ளோம், தேவனுக்காக நாம் சிறந்தவர்களாக இருந்தோம் என்பதை அறிய விரும்புகிறோம். இருப்பினும், பல ஆண்டுகளாக, பிதாவின் சித்தத்தை முதலாவது தேடாமல் , அதாவது முதல் குரலுக்குப் பின்னால் உள்ள இருதயத்தையும் தன்மையையும் தேடாமல், இரண்டாவது குரலை நான் நன்றாக கனம் பண்ண முடியாது என்பதை நான் கற்றுக்கொண்டேன். "எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால்!" அந்த யதார்த்தத்தை நாம் நெருங்க நெருங்க, நித்தியத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த எதையும் நம்மால் செய்ய முடியாது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். நாம் தேவனைப் போற்றும் வகையில் வாழும்போதுதான், நம் வாழ்வில் ஏற்படுத்தப்பட்ட முக்கியத்துவத்தையும் தாக்கத்தையும் அடைவோம்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள மற்றும் நீதியுள்ள பிதாவே , நீர் இல்லாமல், என்றென்றுமுள்ள நன்மையான நித்தியத்தின் முக்கியத்துவம் வாய்ந்த எதையும் என்னால் தனியே செய்ய முடியாது என்பதை நான் அறிவேன். நான் எனக்கு நன்மையென்று தோன்றின வழியில் முயற்சி செய்து அதில் தோல்வியடைந்தேன். உம்மை பிரியப்படுத்த நான் இப்போதும், இன்றும், என்றும், சதாகாலமும் வாழ விரும்புகிறேன். நான் இதைச் செய்யும்போது, ​​எனக்குத் தேவையானதை நீர் வழங்குவீர் என்றும், நான் எதைச் செய்து முடிக்க நீர் விரும்புகிறீரோ அதைச் செய்ய எனக்கு அதிகாரத்தையும், பெலனையும் அளிப்பீர் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். இயேசுவின் நல்ல நாமத்தின் மூலமாய் , நான் உமக்கு நன்றி கூறி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து