இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வாழ்க்கையில் மிகப்பெரிய செல்வம் எது? நிச்சயமாக வெள்ளியும், பொன்னும் அல்ல. இவைகள் எல்லாவற்றையும் விட ஞானமே மகா பெரியது, ஏனென்றால் ஞானமே நமக்கு எது மதிப்புமிக்கது, எது சத்தியம் , எது நம் இதயத்திற்கு தகுதியானது, எது தகுதியல்ல என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

என்னுடைய ஜெபம்

பரலோகத்தின் பிதாவே, சதாகாலங்களின் தேவனே, ஒவ்வொரு நல்ல பரிபூரணமான நன்மைகளையும் தருபவரே, தயவுகூர்ந்து பரிசுத்தம் மற்றும் நடைமுறை ஞானத்தினால் என்னை ஆசீர்வதியும் , அதினால் நீர் எப்படி அடியேனை ஆசீர்வதிக்கிறீர் என்பதை நான் முழுமையாக அறிந்து கொள்ளவும், நான் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கவும் விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தினாலே. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து