இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்மில் வாழும் பரிசுத்த ஆவியானவர், வரவிருக்கும் ஒரு பெரிய மகிமைக்கான நமது உத்தரவாதமாகும் (2 கொரிந்தியர் 1:22; 2 கொரிந்தியர் 5: 5). நம்மிடத்தில் வெளிப்படும் அந்த மகிமையின் முதற்பலன்கள் ஆவியானவர். (ரோமர் 8:18).நமது தற்போதைய நிலை நமக்கு முன்னால் என்ன இருக்கிறது என்பதற்கான ஒரு முன்னறிவிப்பு மட்டுமே; நம் பரலோக வாசஸ்தலத்தை தரித்துக் கொண்டு, தேவனால் கட்டப் பட்ட நித்திய வீட்டில் இருக்க நாங்கள் ஏங்குகிறோம் (2 கொரிந்தியர் 5: 1-8).

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , நீங்கள் எனக்கு பல அற்புதமான ஆசீர்வாதங்களை வழங்கியுள்ளீர்கள். அவை ஒவ்வொன்றிற்கும் நான் நன்றி கூறுகிறேன். அதே நேரத்தில் , அன்புள்ள பிதாவே , உம் பிள்ளையாக உம் முன்னிலையில் மகிமை கொண்டு வர நான் ஏங்குகிறேன். உபாதைகள் , உலகக் கவலை, சரீர பலவீனம், என் சுயபாவ பாவத்தினால் உண்டான ஏமாற்றம் ஆகியவை உம் குமாரன் மகிமையுடன் திரும்பும் நாளுக்காக என்னை ஏங்க வைக்கிறது.அந்த நாள் வரை, அடியேனுடைய பரிசுத்தத்தைக் காத்துக் கொள்ள உதவுங்கள். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து