இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வயதான சகோதரி கோரி டென் பூம் கூறின வார்த்தையை நினைத்து பார்க்கிறேன் " பூச்சிகளுக்காக தேவனுக்கு நன்றி கூறுகிறேன். " அவள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, யூத வதை முகாமில் இருந்த ஜெர்மானியப் படைவீரர்களை அந்தச் சிறிய பூச்சிகள் வெளியே நிற்கும்படி தடுத்து நிறுத்தியது. உபத்திரவப்படுவர்களைச் சந்திக்கவும், அவர்களைப் விசாரிக்கவும், அவர்களுக்கு ஊழியம் செய்யவும் அவளை அனுமதித்தது. அங்கே அவள் இயேசுவின் அன்பை பகிர்ந்து கொள்ளவும் ஏதுவாயிருந்தது. துன்பத்தின் மிக மோசமான சூழ்நிலையிலும், நம் வாழ்க்கையின் குறிக்கோள் நற்குணமே , சொகுசான வாழ்க்கை இல்லை என்பதை அறிந்தவர்கள் மூலமாய் மாத்திரமே தேவன் ஆசீர்வாதங்களை கொண்டு வர முடியும்.

என்னுடைய ஜெபம்

வல்லமையுள்ள பிதாவே , நான் கடினம் , வலி, துன்பம் ஆகியவற்றால் பொறுமையிழந்து விரக்தியடைகிறேன் என்று ஒப்புக்கொள்கிறேன். உம் அன்பும் கிருபையும் தேவைப்படுபவர்களை நான் ஆசீர்வதிப்பதற்காக, தயவுகூர்ந்து எனக்கு அதிக மனதுருகும் குணத்தையும் , கூர்ந்து கேட்கும் செவி ஞானத்தையும் தயவாய் தாரும் . இயேசுவிடம் இருந்து பிறரைத் தடுக்கும் வழியில் சாத்தான் வைக்கும் தடைகளை உடைப்பதில் உள்ள சிரமங்களில் அடியேன் மகிழ்ச்சியைக் காண எனக்கு பெலன் தாரும் . என் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து