இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"உங்களால் மட்டுமே காட்டுத் தீயை தடுக்க முடியும்!" இது அமெரிக்காவின் காட்டுதீயை கட்டுப்படுத்தும் நிறுவனத்தின் விளம்பரம் : அடிப்படையில், நீதிமொழிகளின் ஞானி கோள் சொல்லுகிறவர்களை பற்றி சொல்வது இதுதான். நாம் வெப்பத்தை குறைக்கலாம், தீயை அணைக்கலாம், சண்டையை தணிக்கலாம் . எப்படி? கோள் சொல்வதற்கு அடிப்படையான காரணங்களை வழங்காததன் மூலம், அழிவுகரமான சூழ்ச்சிகளைப் பரப்புவதற்கான தூண்டுதலைத் தவிர்த்து, ஒரு அந்தரங்கமான வதந்தி பரம்புவதை முற்றிலுமாய் தவிர்க்கலாம் . கோள் சொல்வது இல்லாமல், ஒரு போட்டியின் கசப்பு கரைந்து, உறவுகளை சரிசெய்ய முடியும்.

என்னுடைய ஜெபம்

தேவனே , என்னை மன்னியுங்கள், ஏனென்றால் நான் சில சமயங்களில் கோள் சொல்வதை என் வாழ்க்கையில் வைத்திருக்கிறேன் அல்லது கோள் சொல்லும் ஒருவருடன் உரையாடி கொண்டிருக்கிறேன். கோள் சொல்லுகிறவர்களோடு கலந்து கொண்டு நான் காயப்படுத்தியவர்களை குணமாக்கி ஆசீர்வதித்தருளும் . பிறர் தேவைக்கேற்ப ஆசீர்வதிக்க உதவுவதை மட்டும் சொல்லும் பெலத்தையும், என் அலட்சியமான வார்த்தைகளால் முறிந்த உறவுகளை சீர்செய்யும் தைரியத்தையும், என் முன் வதந்திகளை பரப்ப முற்படுபவர்களை எப்படி தவிர்ப்பது என்பதை அறியும் ஞானத்தையும் எனக்கு தாரும் . . இயேசுவின் நல்ல நாமத்தினாலே , நான் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து