இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீதிமானுடைய சத்துரு ஒரு காலத்தில் செழித்து வளரலாம், ஆனால் நீதிமானிடம் தேவன் அளவற்ற அன்பையும் தயவையும் காண்பிக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பு பட்டணத்திலுள்ள அன்பார்ந்த சிநேகிதர்களுக்கு நினைப்பூட்டி கூறுவது என்னவென்றால் அவர்களுடைய ஜெபமும், பரிசுத்தாவியின் கிரியையுமே அவருடைய விடுதலைக்கு உத்திரவாதம்கொடுத்தது: ஏதோ ஒரு வகையில் அவர்களுக்குச் சேவை செய்வதற்காக அவர் சிறையிலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டிருக்கலாம் அல்லது பிதாவுடன் செல்வதற்காக அவர் மரணத்தின் மூலம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கலாம் (பிலி. 3: 19-21). எப்படியாயினும், தேவனுடைய நீதிமான்களுக்கு விருந்தையும் , மகிமையுள்ள ஸ்தலத்தையும், இராஜவரவேற்பையும் அவர்களுடைய விசுவாசத்தை நிரூபிக்கும்பொருட்டு அவர்களுடைய சத்துருக்களுக்கு முன்பாக கொடுப்பார்.

என்னுடைய ஜெபம்

பிதாவே, சதாகாலங்களுக்கும் ராஜாவே, நீங்கள் என்னை கனப்படுத்துவதற்காக ஒரு விருந்தை ஏற்பாடு செய்வீர்கள் என்றும் என்னை உம் நேசப் பிள்ளைகளில் ஒருவராக நடத்துவீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த வாக்குதத்தத்திற்காக நன்றி. இந்த நியாயப்படுத்துதலின் உத்தரவாதத்திற்கு நன்றி.உம் அன்பு மற்றும் கிருபை என் வாழ்க்கையில் நிரம்பி வழிவதற்காக நன்றி.இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து