இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பயம் என்பது நம்மை செயலிழக்கச் செய்யும் ஒர் உணர்ச்சியாகும் . அது நம் உற்சாகத்தையும் , முடிவெடுக்கும் திறனையும், பெலனையும் பறித்துகொண்டுபோகிறது . பயத்தின் இயலாமையிலிருந்து நாம் வெளியேறவும், அதின் பதட்டத்தை நம் பெலனாக மாற்றவும் தைரியம் நமக்கு உதவுகிறது. ஆனால், சாத்தானும் அவனுடைய உடன் வேலையாட்களும் உண்மையில் நம்மிடம் இருக்கக்கூடிய நம் மாம்ச சரீரத்தை மாத்திரமே கொள்ளைக் கொள்ள முடியும் என்பதை நாம் அறிந்தால்தான் இந்த வகையான தைரியம் நமக்கு முழுமையாக வரும் . நம் மனதையும், நம் அணுகுமுறையையும், நம் விசுவாசத்தையும், எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசுவின் மூலமாய் நமக்கு அருளப்பட்ட தேவனுடைய உறவையும் அவனால் பறித்துக்கொள்ள முடியாது.

என்னுடைய ஜெபம்

என் இரட்சகரும், மாபெரிதான மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனே , நான் பயப்படும் அனைத்தின் மீதும் இயேசுவின் மூலமாய் ஜெயம் பெற்றதற்காக நன்றி. நான் விசுவாசிக்கக் கூடிய ஒரு இரட்சகரை தந்ததுமல்லாமல் , நான் ஜெயத்துடன் வாழக்கூடிய நம்பிக்கையையும் நீர் எனக்குக் கொடுத்திருக்கிறீர். பரிசுத்தம் நிறைந்தவரும் ஜெய இராஜாவாகிய இயேசுவின் நாமத்தினாலே நான் நன்றி கூறுகிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து