இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மிக பயங்கரமாக வேட்டையாடக்கூடியவர்களால் கூட அவர்களின் பாதுகாப்பையும்,உணவையும் உறுதி செய்ய முடியாவிட்டாலும், தேவன் மீது பசி தாகம் உள்ளவர்கள் தங்களுக்கு உண்டான உணவையும் , ஆசீர்வாதத்தையும், நீடித்த நிலையையும் காண்பார்கள்.

என்னுடைய ஜெபம்

பிதாவே , நண்பர்களும், உடன் பங்காளிகளும் எனக்கு துரோகம் பண்ணி கைவிட்டாலும் கூட நீர் என்னை விட்டு விலகுவதுமில்லை, என்னை கைவிடுவதுமில்லை என்ற வாக்குதத்தத்திற்காக நன்றி. சில நேரங்களில் உம்மை முழுமையாக புரிந்துகொள்வது கடினம் என்று நான் ஒப்புக்கொள்கிறேன். நீர் எப்பொழுதும் உண்மையுள்ளவர் என்பதில் நம்பிக்கை குறைவாகயிருந்த நேரங்களுக்காக அடியேனை மன்னியும். தெளிவற்ற மற்றும் புண்பட்ட நேரங்களிலும் , உம் கிருபையினால் நான் நம்பிக்கையுடன் அலைகிறேன். தயவுசெய்து என்னை மன்னித்து என் நம்பிக்கையை புதுப்பிக்க உதவுங்கள்.அன்புள்ள பிதாவே , யாரும் நேசித்திராத அளவுக்கு நீர் என்னை நேசிக்கிறீர் என்று நான் நம்புகிறேன். சர்வ வல்லமையுள்ள தேவனே , நீர் என் காயங்கள் மற்றும் கவலைகளைப் பற்றி கவலைப்படுகிறீர்கள். உம் அனுதின பராமரிப்பு, தேவைகள் சந்திப்பு மற்றும் எனக்கான கிருபை ஆகியவற்றில் நம்பிக்கை வைக்க நான் இன்றே என் இதயத்தை மீண்டும் பரிந்துரைக்கிறேன். இயேசுவின் நாமத்திலே . ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து