இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இரக்கமற்ற எதிரியின் முகத்திற்கு முன்னாக இஸ்ரவேல் ஜனங்கள் பேரழிவிற்குள்ளானபோது, ​​அது தேவனுடைய ஜனங்களின் ஆத்துமாவிலே எல்லாவற்றையும் உரிந்து நிர்வாணிகளாவதினால் தங்கள் மகிமையை இழந்துப்போகிறார்கள், தேவன் தனது வாக்குத்தத்தத்தை கொடுக்கிறார் . அவர்கள் மீதான அழிவு அவர்களின் மூர்க்கத்தின் நிமித்தமும் மற்றும் பாவத்தின் பிரதிபலிப்பாக இருந்தபோதிலும், தேவனின் சிட்சை என்பது தண்டனை மாத்திரம் அல்ல, ஆனால் அவைகளினால் மீட்பு உண்டாகும் . அவர்களின் அழிவிலே , தேவன் நன்மையையும் , நம்பிக்கையையும் மற்றும் ஒரு சிறந்த எதிர்காலத்தையும் கொடுப்பேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார் . உடைந்த எலும்புகளின் காயங்களை கட்டும்போது, மருத்துவர் கொடுக்கும் சிகிச்சையிலே வலி உண்டாகுவது போல, தேவனின் சீர்ப்படுத்தும் முறை என்பதுஉங்களுக்கு வலியை கொண்டுவருவது என்பது நோக்கம் அல்ல, ஆனால் அவைகளினால் நாம் குணப்படவும் , இறுதியிலே ஜீவனை பெற்றுக்கொள்ளவும் எதுவாயிருக்கும் .

என்னுடைய ஜெபம்

என் போராட்டங்களின் மத்தியிலே , ஆண்டவரே, உம் கிருபையைக் கண்டுபிடிக்க எனக்கு உதவியருளும் - அவைகள் போராட்டம் மற்றும் வலியின் விமோஷனத்தினால் அல்ல, மாறாக மீட்பதிலும், என் இருதயமும் மற்றும் எனது பழக்கவழக்கங்களையும் உமது மகிமைக்கு நேராக மாற்றுவதிலும் உண்டாகும் . உமது கிருபையினாலும் என் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தினாலும் அதைக் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து