இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் நமக்கு அநேக நன்மைகளை செய்கிறார். அவரே நமக்கு பெலனும் வாக்குத்தத்தமும் ஆவார், அது நம் வாழ்க்கையைப் பாதுகாக்கிறது. அவரே நம்மை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் இரட்சித்தவர். நாம் ஏறேடுக்கும் தொழுகையானது அவர் நமக்கு செய்த செயலுக்கான நன்றியுணர்வு மற்றும் அவர் நமக்கு யார் என்றதான அங்கீகாரம் இன்னுமாய் அவர் நமக்கு என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும் . தேவனுக்கான தொழுகை என்பது ஒரு சபை கட்டிடத்தில் செய்யப்படும் காரியம் என்றோ ,ஒரு அமைதியான சூழலில் செய்யப்படும் காரியமாக மாத்திரம் அவைகளை நாம் பிரிக்கமுடியாது . தேவனுக்கான தொழுகை என்பது நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கியது. அதனால்தான், நம் வாயின் வார்த்தைகளையும், நம் இருதயத்தின் தியானமும் தேவனுடைய சித்தத்திற்கும், கிரியைக்கும் ஏற்ப மாற்றுவது மிகவும் அவசியமானது. தனியாக தேவனை தொழுதுக்கொள்ளுவது , அமைதியாக தன்னந்தனியாக இருந்தாலும் சரி, மற்ற கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து ஒரு குழுவாக இருந்தாலும் சரி, நம் இருதயங்களையும் வாழ்க்கையையும் சரிசெய்யும் நேரமாகிறது, இதனால் நாம் பொதுவாக ஏறேடுக்கும் தொழுகை , உலகிலே நாம் வாழ்கின்ற நம் வாழ்க்கை, தேவனுடைய சத்தத்தை அறியாமல் இவ்வுலக மக்கள், இவைகள் அவருடைய சத்தத்தை கேட்க வழியுண்டாக்கும்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் சர்வவல்லமையுமுள்ள தேவனே , இந்த நாள் உமது கனத்திற்கும், தொழுகைக்கும் உரிய நாளாக இருக்க விரும்புகிறேன். என் வாழ்க்கை உம்மை எப்பொழுதும் துதிக்கட்டும் : சிந்தனையினால் மாத்திரமல்ல , வார்த்தைகளினால் மட்டுமல்ல, கிரியையினாலும் அப்படி உண்டாகட்டும் இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து