இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மெய்யான இரட்சிப்பு எங்கிருந்து வருகிறது? பரலோகத்தின் தேவனிடமிருந்து வருகிறது. தேவனுடைய பரிசுத்தம் மற்றும் வல்லமைக்கு ஆழ்ந்த பயபக்தியுடன் கனத்தை செலுத்துவதன் மூலமாயும் , அவருடைய உடன்படிக்கையில் நிலைத்திருப்பதாலும் , அவரையே நோக்கி பார்த்து நம் கவனத்தை பராமரிப்பதன் மூலமாயும் நமக்கு இரட்சிப்பு உண்டாகிறது . நம் இரட்சிபுக்கான மற்ற எந்த வழிகளும் தவறானவை மற்றும் அவைகள் கடைசியில் தங்களை ஒரு கண்ணி என்று நிரூபிக்கின்றன. இறுகிய கயிற்றில் மேல் நடப்பவர், தன் கண்களை தரையிலோ, சுற்றுப்புறத்திலோ அல்லாமல், அவன் நடக்க வேண்டிய பாதையின் முன்னால் இருக்கும் கயிற்றின் மேல் அதிக கவனமாக இருப்பான். அது போல, நாமும், நம் கண்களும் தேவனை மீதே நோக்கி இருக்க வேண்டும்.அவரை நோக்கி பார்ப்பதன் மூலம் மட்டுமே அவர் நம்மை நித்திய பாதுகாப்பிற்கு அழைத்துச் செல்வார்.

என்னுடைய ஜெபம்

அன்பான தந்தையே, என்னை இரட்சிக்க நீர் அநேக காரியங்களை செய்திருக்கிறீர்கள். நான் பாவியாகவும், உம் அன்பிற்கு துரோகியாகவும் இருந்தப்போது , மிகவும் பரிசுத்தமும் , நீதியுள்ளவருமாகிய நீர் , என் கரங்களை பிடித்து நடத்தி செல்ல இறங்கிவந்தீர் . உமது வழிகளை எனக்கு போதித்தருளும் . என் வாழ்வில் தவறுகளை சரி செய்யும். உமது சத்தியத்தின் வழிகளில் என்னை வழிநடத்தும். நான் என் பாவத்திலிருந்து மட்டுமல்ல, பயனற்ற மற்றும் விரக்தியின் நாட்களிலிருந்தும் காப்பாற்றப்பட விரும்புகிறேன். உம்மை மகிமைப்படுத்த ஒரு பயனுள்ள பாத்திரமாக என்னை வனைந்துக் கொள்ளும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து