இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நமது மன விருப்பப்பட்டியலைப் பெறுவதற்கான ஒரு வழியாக இதைப் பார்ப்பதற்குப் பதிலாக, அது உண்மையில் என்ன என்பதைப் பார்ப்போம் - மற்ற எல்லா விஷயங்களுக்கும் மேலாக தேவனுடனான அன்பான உறவைத் தேடுவதற்கானஒரு அழைப்பு இவையாகும் . அவரைக் கண்டுபிடிப்பதில், நமது முன்னுரிமைகள் சரியாகச் சீரமைக்கப்பட்டிருப்பதையும் , மேலும் எது உண்மையில் மேன்மையானது மற்றும் எது அழிந்துப்போக கூடியது என்பதைத் தெரிந்துகொள்ள நம் இருதயங்கள் இணைந்திருப்பதையும் காண்போம். அப்போது நாம் அவருக்குள் வாழ்வது நம் இருதயத்தின் மிகப்பெரிய விருப்பம் என்பதை நாம் உணர்ந்துக்கொள்வோம் .

என்னுடைய ஜெபம்

அருமையும், கிருபையும் மிக்க பிதாவே , என் இருதயம் அடிக்கடி சுயநலம் நிறைந்ததாக இருப்பதை நான் உம்மிடம் அறிக்கையிடுகிறேன். ஆனால் இதுபோன்ற தருணங்களில், பிதாவே , எனக்கு மிகவும் தேவையானது உம் பிரசன்னம் மற்றும் உம் சித்தம் என் இதயத்தின் விருப்பமாக இருப்பதை நான் உணர்கிறேன். தயவு செய்து உமது ஆவியை என்னுள் தூண்டிவிடுங்கள், அதினால் என் வாழ்வில் நீர் மேன்மையாக இருப்பதைப் பறிக்கும் எந்த சுயநல வஞ்சகத்தையும் நான் காண முடியும். நான் அற்பமாகவும், சுயநலமாகவும், ஆழமற்றவராகவும் இருக்கும்போது என்னை மன்னியுங்கள். அழிந்து போகக்கூடிய மனுஷன் உம்மை அறிந்து கொள்வதற்காக நான் உம்மை இன்னும் அதிகமாய் அறிந்து கொள்ளட்டும், அதனால் நான் மேன்மையடைய அல்ல, ஆனால் நீர் மாத்திரம் மகிமைப்பட வேண்டும். உமது கிருபையினாலும் இயேசுவின் நாமத்தினாலும் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து