இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்மில் பலர் நியாயப்பிரமானம் என்ற வார்த்தையைப் பற்றி நம்பிக்கையற்றவர்கள் மற்றும் இதுபோன்ற ஒரு வேத வசனத்தை கேட்பது கடினம் என்று நினைப்பவர்கள். ஆனால் கிருபையின் புதிய உடன்படிக்கையின் குறிக்கோள் மற்றும் பரிசுத்த ஆவியின் ஈவு, நாம் தேவனுடைய சட்டம் நம் இருதயங்களில் எழுதப்பட்டு நம் வாழ்வில் கிரியையினால் நிரூபிக்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். அது கற் பலகைகளில் எழுதப்படுவதைக் குறித்து தேவன் கவலைப்படுவதில்லை. தேவனுடைய மக்களின் முழு கவனமும் அவருடைய சித்தத்தைச் செய்வதற்கான அவர்களின் விருப்பமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார், அத்தகைய நாளைப் பற்றி எரேமியா தீர்க்கதரிசனம் கூறியிருக்கிறார் - நம் பிதா நேசிக்கும் விஷயங்களை நேசிக்கவும், அவர் வெறுக்கும் விஷயங்களை வெறுக்கவும் செய்ய வேண்டும்.

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , நான் உமது சித்தத்தைச் செய்ய விரும்புகிறேன். நான் உம்மைப் பிரியப்படுத்தவும், உம்மைப் மகிமைப்படுத்தவும், மற்றவர்களை உம்மிடம் வழிநடத்தவும் விரும்புகிறேன். உம்முடைய விருப்பத்தை அறிய ஆவிக்குரிய பகுத்தறிவையும், இன்றே அதைச் செய்வதற்கான ஆவிக்குரிய தைரியத்தையும் எனக்குக் தாரும் . உமக்காக வாழக்கூடாது என்று சாத்தானால் நான் சோதிக்கப்படும்போது, ​​உம்முடைய குணமும் நீதியும் என் இருதயத்திற்கு தெரிவிக்க விரும்புகிறேன். நான் தவறு செய்யும் போது அல்லது என் ஜீவ பாதையை இழந்திருக்கும் வேலைகளில், என்னை மெதுவாக தாழ்த்தியருளும் . இயேசுவின் மகத்தான நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து