இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சில வேளைகளில், மற்றவர்களின் பாரங்களை எண்ணிபார்க்க முடியாத அளவுக்கு என் பாரங்களை அதிகமாக உணர்கிறேன். ஆனால் நான் அவரைப் போல் இருந்தால், நான் மற்றவர்களுடைய பாரத்தை சுமப்பவனாக இருப்பேன் என்று இயேசு எனக்கு நினைப்பூட்டுகிறார். அவர்,நம்முடைய தோள்களிலிருந்து நம்முடைய பாரமான சுமையை தூக்கி சுமக்கும் நம்மில் ஒருவரானார். பாவம், மரணம், நரகம் ஆகியவற்றின் பாரத்திலிருந்து நம்மை விடுவிப்பதற்காகவே கர்த்தர் மரித்தார். நம்மைச் சுற்றியிருப்பவர்களின் பாரங்களை நாம் லேசானதாய் மாற்ற , நம்முடைய பாரமான சுமைகளை இயேசுவானவர் சுமப்பதினால் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.

என்னுடைய ஜெபம்

இரக்கமுள்ள பிதாவே , என்னைச் சுற்றியுள்ள மற்றவர்களின் வாழ்க்கையில் உள்ள சுமைகளைப் பார்க்கவும் , பின்னர் அந்த சுமைகளுக்கு உதவி கரங்களை நீட்டி அதற்கு பதிலளிக்க எனக்கு உதவியருளும் . உடைந்து போனவர்களுக்கும், மனச்சோர்வடைந்தவர்களுக்கும் நான் ஆசீர்வாதமாக இருக்க விரும்புகிறேன், எனவே எனக்கென்று நீர் வைத்துள்ள இடத்தையும், இன்னுமாய் உம் மகிமைக்காக நான் ஊழியம் செய்யும் வழியையும் கண்டறிய எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து