இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நமக்கும் நம் விசுவாசத்திற்கும் விரோதமானவர்களின் இருதயங்களை எப்படி ஜெயிப்பது ? இயேசுவைப் பின்பற்ற நாம் அவர்களை எவ்வாறு தூண்டுவது? இன்று விசுவாசிகள் மத்தியில் திறமையாய் வழக்காடுபவர்கள் மற்றும் வேதாகம சத்தியத்தை நன்கு அறிந்தவர்கள் நமக்குத் தேவைப்பட்டாலும், நம்மில் பெரும்பாலானோர் நம் அன்றாட வாழ்வில் எப்படி ஜீவிக்கிறோம் , மற்றும் தனிப்பட்ட முறையில் அவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதன் மூலமாகவே மற்றவர்களை இயேசுவுக்காய் ஜெயிப்போம் . எத்தனை விமர்சனங்கள் மற்றும் கடுமையான வார்த்தைகளை நாம் பெற்றாலும், நம்முடைய நற்கிரியைகள் கிறிஸ்துவைப் போலவே இருக்க வேண்டும். நன்மைகளை குறைவாகச் செய்வது என்பது, ஜீவனுள்ள கிறிஸ்துவை நம்முடைய கிரியைகளின் மூலமாக மற்றவர்கள் காண்பதற்கான வாய்ப்பை பறிப்பதாகும்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், நீதியுமுள்ள பிதாவே, மற்றவர்கள் மீது, குறிப்பாக கிறிஸ்துவை அறியாத என்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது என் செல்வாக்கு பற்றி அதிகம் அறிந்திருக்காததற்காக அடியேனை மன்னித்தருளும் . தயவு செய்து உமது பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பி அடியேனை பெலப்படுத்துங்கள், அதனால் சில சமயங்களில் என் வழியில் வரும் விமர்சனங்கள் மற்றும் விசாரனை ஆகிய நேரங்களில் நான் அவைகளை கண்டு தொய்ந்துபோக மாட்டேன் . மேலும், தகப்பனே, எனக்கு அநீதி இழைத்தவர்களிடம் இதை தாழ்மையுடனும், அதிக கனத்துடனும் செய்ய விரும்புகிறேன் (1 பேதுரு 3:13-16). நான் எதை நம்புகிறேனோ மற்றும் நான் வாழ்கிறதான வாழ்க்கையில் எனக்கு ஏன் நம்பிக்கை இருக்கிறது என்பதைப் மற்றவர்கள் காணும்பொழுது அவர்களுக்கு தாக்கத்தை உண்டுப்பண்ணும் விதமாக , ​​என் வாழ்க்கையை எடுத்துப் பயன்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து