இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய மாபெரிதான ஊழியத்திலே நம்முடைய பங்கு என்ன? சங்கீதம் 21ஆம் அதிகாரத்தில் , ஆவியானவர் நாம் தேவனை போற்றுபவர்களாகவும், தொழுதுகொள்ளுபவர்களாகவும் நம்முடைய முக்கியத்துவத்தை அவர் நமக்கு உணர்த்துகிறார். அவருடைய அனந்த மகிமையிலே தன்னை வெளிப்படுத்தும்படியாகவும் மற்றும் அவருடைய சத்துவத்தின் வல்லமையை எல்லா மக்களுக்கும் விளங்கும்படி செய்யவும் தேவனிடம் வேண்டிக்கொள்கிறோம். சர்வவல்லமையுள்ள கர்த்தருடைய செயல்களைக் கண்டு பிரமித்து வியந்து பார்க்கிறோம் . நம் பரலோகத்தின் தேவனானவர் நம்மை ஆச்சரியப்படுத்தவும், ஆசீர்வதிக்கவும் செய்த எண்ணி பார்க்கமுடியாத காரியங்களுக்காக அவரைப் போற்றுகிறோம் . கர்த்தாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடிக்கீர்த்தனம்பண்ணுவோம்.

என்னுடைய ஜெபம்

பரலோகத்திலுள்ள அன்பான பிதாவே, எல்லாவற்றிற்கும் மேலாக உம்மையும் உம்முடைய நாமத்தையும் மேன்மை படுத்துவீராக . நீர் செய்த, செய்கிற, எதிர்காலத்தில் செய்யப்போகிற அனைத்திற்காகவும் தினமும் உம்மை போற்றி துதித்து, நன்றி செலுத்துவதற்காக அடியேனை முற்றிலுமாய் ஒப்புவிக்கிறேன் . நீரே , ஒரே மெய்யான தேவன் , ஆதியும்,அந்தமும்,ஆல்பாவும் , ஒமேகாவுமாய் இருக்கிறீர் , நான் என் இதயப்பூர்வமான துதியையும் மகிழ்ச்சியின் பாடல்களையும் அர்ப்பணிக்கிறேன் . கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து