இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்களுக்கு ஒரு புதிய கிறிஸ்தவரைத் தெரியுமா? புதிய விசுவாசிகளுடன் உங்களுக்கு நட்பு உள்ளதா? ஒரு கிறிஸ்தவராக மாறுவதற்கு இந்த புதிய விசுவாசிகளுக்கு சவாலாக இருக்கலாம் என்பதை பேதுரு, பவுல் மற்றும் பர்னபா நமக்கு நினைப்பூட்டுகிறார்கள் . அவர்களில் அநேகர் தங்கள் முன்னாள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள் இன்னுமாய் கஷ்டங்கள் மற்றும் பாடுகளை எதிர்கொண்டனர் (1 பேதுரு 4:3-5). எனவே நாம் அவர்களுடன் (புதிய விசுவாசிகள் ) சுவிசேஷத்தை மட்டும் பகிர்ந்து கொள்ளாமல் , அவர்களின் துன்பங்களிலே அவருடனே கூட நிற்போம், அவர்களின் தேவைகள் இன்னதென்று அறிந்துக்கொள்வோம் , அவர்களைப் பெலப்படுத்துவோம், அவர்களை ஊக்குவிப்போம், மேலும் ஊழியஞ் செய்வதற்கும்,அவர்கள் விசுவாசத்தில் தேறினவர்களாவதற்கும் அவர்களை ஆயத்தப்படுத்துவோம்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , எங்கள் திருச்சபையிலும், எனது நட்பு வட்டத்திலும் உள்ள புதிய கிறிஸ்தவர்களுடன் உம்முடைய சமூகம் எப்பொழுதும் இருக்கவேண்டுமென்று தயவாய் கேட்கிறேன் . அவர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தும் மற்றும் பெலப்படுத்தும் மற்றும் ஒரு நிலையான ஆதாரமாக இருக்கும்படி என்னைப் எடுத்து பயன்படுத்தியருளும் .அடியேனுடைய வாழ்க்கை அவர்களுக்கு ஒரு நன்மையான தாக்கத்தை உண்டுபண்ணத்தக்கதாக தயவுக்கூர்ந்து பயன்படுத்தியருளும் . இயேசுவின் நாமத்தின் மூலமாய் இந்த புதிய விசுவாசிகளுக்கு உம்முடைய ஆசீர்வாதம் யாவும் கிடைக்கும்படி ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து