இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எதிர்காலத்தை பற்றிய தாழ்மை! நாளைய தினத்தை நாம் கட்டுப்படுத்த இயலாது. அநேக வேளைகளில் நாம் நாளைய தினத்தை குறித்து லேசாக எடுத்திருக்கலாம்; இனிமேல் அப்படி இல்லை. நாளையத்தினம் வராமல் போகலாம். நாளையத்தினத்தில் ஏதாவது பயங்கரமான காரியம் நடக்கலாம். நாம் சுதந்தரித்திருக்கும் எல்லா காரியங்களும் நாளையத்தினத்தில் மறைந்துபோகலாம். இப்படிபட்டதான தாழ்ச்சியான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, நாம் பற்றிக்கொள்ள ஏதாவது நன்மை பயக்கும் காரியம் உண்டா? தேவனானவர் நாளையத்தினத்தை தம்முடைய கரங்களில் வைத்திருக்கிறார் என்று நாம் அறிவோம். ஏனெனில் நம்முடைய ஜீவன் கிறிஸ்துவோடு கூட மறைந்திருப்பதால், நம்முடைய நாளையத்தினம் பாதுகாப்பானது என்று நாம் அறிவோம் ( கொலோசியர் 3:1-4).நாம் எதிர்பார்ப்பது போல் இல்லாமல் இருக்கலாம். நாம் திட்டமிட்டபடி நடக்காமல் போகலாம். ஆனால், அது தேவனுடைய தீர்மானத்தின் படியே நடக்கும், அது அவருடைய ஆறுதலிலும் , வெற்றியிலும் மற்றும் மகிமையிலும் நாம் பங்கெடுத்துக் கொள்வதில் முடிவடையும்.

என்னுடைய ஜெபம்

பிதாவே, எனது நாளையத்தினத்தின் அனைத்து காரியங்களும் உம்முடைய கரங்களில் உள்ளது. இன்றைய நாளில் நான் உமக்கு பயனுள்ளவனாக இருக்க வேண்டும் என்று கேட்கிறேன் ; நாளையத்தினத்தை குறித்து கவலைப்படாமலும், அடியேன் உம் மீது வைத்திருக்கும் அன்பிலும், விசுவாசத்திலும், அர்ப்பணிப்பிலும் போதுமான தைரியம் கொண்டிருக்க கேட்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து