இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எல்லாவற்றின் முதற்பலனாலும் கர்த்தரை கனம் பண்ணவேண்டும். நாம் அவருக்கு கடைசியாகவோ, குறைந்தபட்சமாகவோ அல்லது ம மீதியானதையோ கொடுக்ககூடாது. அவர் நமக்கு மிகச் சிறந்த, மிகவும் விலையேறப்பெற்ற மற்றும் பொருத்தமான ஈவைக் கொடுத்தார் —அந்த ஈவு அவருடைய குமாரனாகிய இயேசு. தேவனுடைய விவரிக்க முடியாத ஈவுக்காக ஸ்தோத்திரம் ! இப்படிப்பட்ட அவருக்கு எப்படி நம்முடைய சிறந்த, நம்முடைய முதற்பேரானவை மற்றும் மிகவும் விலையுயர்ந்ததை விட குறைவானதைக் எப்படி கொடுக்க முடியும்?

என்னுடைய ஜெபம்

கிருபையின் தேவனே, அன்பின் பிதாவே, நீர் என் மேல் பொழிந்த அளவற்ற ஒவ்வொரு நன்மையான மற்றும் சரியான ஈவுக்காகவும் உமக்கு நன்றி. நான் உமக்கு உதாரத்துவமாக அளிக்கும் என் இதயத்தின் உவந்த காணிக்கையை தயவு கூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். அவற்றை மென்மையாக்கி,கிருபையுள்ளதாக்கி மற்றும் உம்மைப் போல தாராளமாய் இருக்கம்படியாகவும் செய்தருளும். உமக்கும், உலகத்திலே உம்முடைய வேலைக்கும் எனது முதல் மற்றும் சிறந்ததையே வழங்குவேன் என்று உறுதியளிக்கிறேன் . இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து