இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இன்று நீங்கள் எப்படிப்பட்ட வாசனை வீசுகிறவர்களாயிருக்கிறீர்கள் ? இந்தக் கேள்வி நமக்கு மிகவும் தனிப்பட்டதா? தேவனுக்கு அப்படியல்ல! நாம் யாவரும் வெற்றியிலிருந்து திரும்பும் போர்வீரர்கள், நம்முடைய சமூகத்திலிருந்து வெற்றியின் வாசனை ஊடுருவிச் செல்லும் என்று பவுலானவர் கூறுகிறார். நம்மைப் பார்க்கிறவர்களும் நம்மை அறிந்தவர்களும் , இந்த வாசனை நம் தேவனையும் , இயேசுவின் மீட்பின் கிரியையின் மூலமாக மரணம், பாவம் மற்றும் நரகத்திலிருந்து நமக்கான வெற்றியையும் சுட்டிக்காட்டுகிறது. நாம் தேவனின் ஜெய வீரர்களாக இருக்கிறோம், ஆனால் நாம் இயேசுவுக்குள்ளாய் "இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. " (ரோமர் 8:37). இயேசுவுக்காக வாழ்வோம் என இயேசுவின் வெற்றியின் வாசனையை பரப்பும் அதே வேளையில் முற்றிலுமாய் தேவனின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து வாழ்வோம்!

Thoughts on Today's Verse...

What do you smell like today? Is that question too personal? Not to God! Paul says we are warriors returning from conquest with the smell of victory incense permeating our presence. To those who see us and know us, this aroma points them to God and his victory for us over death, sin, and hell through Jesus' saving work. We are God's conquest, yet we are also "more than conquerors through him who loved us" (Romans 8:37) in Jesus! Let's live surrendered to the Lord's will while spreading the aroma of Jesus' victory as we live for him!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , பாவம் மற்றும் மரணத்தின் மீதான உம் குமாரன் மூலமாக பெற்ற நம்பமுடியாத வெற்றிக்காக நன்றி. என் கலகத்தனமான இருதயத்தை வென்று,மேலும் உமது ஒப்பற்ற கிருபையினால் என்னை ஆசீர்வதித்ததற்காகவும் உமக்கு நன்றி. வாழ்க்கையின் சவால்கள், சிரமங்கள் மற்றும் வலிகள் இருந்தபோதிலும், அன்பான ஆண்டவரே, நான் உம்மை நோக்கிப் பயணிக்கும்போது என் வாழ்க்கையை ஒரு வெற்றிப் பயணமாக வாழ எனக்கு உதவிச் செய்யும் . இயேசுவின் வல்லமையும் பரிசுத்தமுமான நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Thank you, O Lord God Almighty, for your incredible victory over sin and death. Thank you even more for conquering my rebellious heart and blessing me with your incomparable grace. Despite life's challenges, difficulties, and pains, dear Lord, please help me live my life as a victory march as I journey home to you. In Jesus' mighty and holy name, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of 2 கொரிந்தியர் - 2 Corinthians - 2:14

கருத்து