இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இன்று உலகம் என்னிடமிருந்து அதிகம் செவிக்கொடுக்க வேண்டியது என்ன? என்னுடைய வாழ்க்கை கிருபையோடு இசைந்த வாழ்க்கை அதின் மீது என் நம்பிக்கையையும் அதையே பறைசாற்றவேண்டும் . நன்மை செய்வது, கிறிஸ்துவைப் போல் வாழ்வது , எதிர்ப்பு, கிண்டல் மற்றும் துன்புறுத்தல் போன்ற காரியங்களுக்கு கூட பேதுருவின் பதில் இதுவாகவே இருந்தது . நாம் இயேசுவுக்குள்ளாக சுயாதீனமுள்ளவர்களாய் இருக்கிறோம், ஆனால் சுயாதீனமுள்ளவர்களாய் இருப்பது என்பது நாம் சுயாதீனமுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை பாசாங்குத்தனமாக நிரூபிக்க வேண்டியதில்லை. மாறாக, மரணத்தை ஜெயிக்க மரித்து, முழுமையான பரலோகத்தின் மேன்மையான சுதந்திரத்தை விட்டுவந்த அவருக்காக நாம் வாழ்வதினால் , அந்த சுயாதீனத்தை நாமும் கண்டுபிடிக்க முடியும். நாம் மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய சுயாதீனமுள்ளவர்களாய் இருக்கிறோம், எல்லாவற்றிற்கும் மேலாக தேவனுக்கு ஊழியஞ் செய்ய வேண்டும்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்த பிதாவே, என் மாபெரிதான சுதந்தரரே, உமது விலையேறப் பெற்ற குமாரனின் மரணத்தினால் பாவம், நியாப்பிரமானம் மற்றும் மரணம் ஆகியவற்றிலிருந்து என்னை விடுவித்தீர்கள். நான் உம்மை நேசிக்கிறேன் என்று சொல்ல இன்று என் இருதயத்தை உம்மிடம் திறக்கிறேன். இந்த ஆச்சரியமான மீட்பின் ஈவுக்காக நான் உமக்கு கோடான கோடி நன்றிகளை சொல்ல விரும்புகிறேன். என் வாழ்வின் செயல்களையும், என் வாயின் வார்த்தைகளையும், என் மனதின் எண்ணங்களையும், என் இருதயத்தின் உணர்ச்சிகளையும் இன்று என் நன்றிக்கடனாக ஏற்றுக்கொள்ளும் . என் ஜீவ பலியும் உமது பரிசுத்த குமாரனுமான இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து