இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் நம்மோடிருக்கிறார்! இதுதான் இயேசுவின் வரலாற்றை பற்றிய மகத்தான செய்தி( மத்தேயு 1:23). தோல்வியடைந்த தேவனுடைய ஜனங்களுக்கு தீர்க்கதரிசியாகிய செப்பனியா கூறும் நம்பிக்கையுள்ள செய்தி. தேவன் நம்மோடிருக்கிறார். அவர் நம்மை இரட்சிக்க வல்லமையுள்ளவர். அவர் நம்மீது அன்புகூருகிறார். அவர் நம் பேரில் மகிழ்ந்து களிகூருகிறார். நம்முடைய இருதயத்தின் அங்கலாய்ப்பை தம்முடைய கரங்களினால் தொட்டு அமர்த்துகிறார். அவர் நமக்காக சந்தோஷத்தின் கீதங்களினால் மகிழ்விக்கிறார். தேவன் நம்மோடிருக்க விரும்புகிறார் இன்னுமாய் நம்மையும் கிட்டிச்சேர அழைக்கிறார். உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்?

என்னுடைய ஜெபம்

பிதாவே,நான் தீமையிலிருந்து விலகி, உம்மிடம் நெருங்கி வர முயலும்போது என் உறுதியை பெலப்படுத்தும். அடியேன் உம்மோடு எவ்வித மாயமான உறவையும் வைக்கவிரும்பவில்லை. உமக்கு நிகரான பொய்யான ஞாபகக்குறி எனக்கு வேண்டாம். உம்மை அறிந்துக்கொள்ள விரும்புகிறேன். உம்முடைய சமூகத்தை அனுபவிக்கவும், மற்றவர்களின் வாழ்க்கையில் உம்முடைய கிருபையின் பாண்டமாய் அடியேன் பயன்பட விரும்புகிறேன் . என் ஆத்துமாவிலே உள்ள குழப்பத்தை தீர்த்துவைக்க எனக்கு உம் பிரசன்னம் தேவை. நீர் என்னோடு இருப்பதற்காக நன்றி. இயேசுவின் நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து