இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் அற்புதமும், மகத்துவமுமானவர். அவர் விரும்பின எல்லாவற்றையும் அவரால் செய்ய முடியும். ஆகவே, அவர் செய்யக்கூடிய எல்லாவற்றிலும், தேவன் நம்மை நேசிக்கவும் ஆசீர்வதிக்கவும் விரும்புகிறார் என்பது ஆச்சரியமான காரியமாக இல்லையா? தேவன் உலகத்துக்குரிய ஆசீர்வாதங்களாலும், ஆவிக்குரிய ஆசீர்வாதங்களாலும் நம்மை ஆசீர்வதிக்கிறார். அநேக பெரிய காரியங்களையும் சிறிய காரியங்களையும், இவ்விரண்டுக்கும் நடுவில் உள்ள காரியங்களையும் கொண்டு அவர் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். நம்பிக்கையோடு நம்மை ஆசீர்வதிக்கிறார். வேதனைக்கு அப்பாற்பட்டு நம்மை ஆசீர்வதிக்கிறார். அவர் இப்போதும் எதிர்காலத்திலும் நம்மை ஆசீர்வதிப்பார். அவர் நம்மை ஆசீர்வதித்து, நம்முடைய மகிமையுள்ள நித்திய முடிவுக்காக காரியங்களைச் செய்கிறார். அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். (ரோமர் 8:28). எனவே நாம் அவரை பயபக்தியுடன் கனப்படுத்துகிறோம் - ஒரு அச்சுறுத்தக்கூடிய பயம் அல்ல, ஆனால் ஒரு அன்பான பிரமிப்புடனும் மற்றும் மகிழ்ச்சியுடனும் - அவர் செய்த அனைத்து பெரிய காரியங்களையும் நினைவில் கொள்வோம்.

என்னுடைய ஜெபம்

உதாரத்துவமும் மற்றும் கிருபையுள்ள தேவனே, அநேக வழிகளில் என்னை ஆசீர்வதித்ததற்காக உமக்கு நன்றி, அவை அனைத்தையும் என்னால் கணக்கிட முடியாது. உம்முடன் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கைக்கு மற்றவர்களை வழிநடத்தும்ஒரு ஆசீர்வாதத்தின் கருவியாக இருக்க தயவுக்கூர்ந்து என் வாழ்க்கையைப் பயன்படுத்தியருளும். இயேசுவின்மெய்யான நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து