இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

எல்லாம்! அனைத்தும் ! நாம் என்ன பேசினாலும் சரி, என்ன கையிட்டு செய்தாலும் சரி, அது இயேசுவினுடைய வல்லமை, கனம், நாமத்தின் மூலமாய் தேவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்! இது நம் வாழ்க்கை முழுவதையும் தேவனுக்கு ஆராதனையையும் ஸ்தோத்திரங்களையும் செலுத்துவதாகவும் ஆக்குகிறது. தொழுகைக்கு செல்கிறேன் என்று ஒன்றுமில்லை , நாம் அப்படியாய் வாழ்ந்தால், பேசினால், செயல்பட்டால் அதுவே தொழுகையாகும் இன்னுமாய் தொழுகையில் எப்போதும் ஸ்தோத்திரம் செலுத்துவதை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அப்படியென்றால் சமீபகாலமாக உங்களுடைய தேவனுக்கான தொழுகை எப்படி இருந்தது?

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள மற்றும் பரிசுத்தமுள்ள தேவனே , என் வாழ்நாள் முழுவதும் உமது மகிமைக்காக வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இயேசுவின் மூலமாய் எனக்குக் கொடுத்த கிருபைக்காக உமக்கு எப்பொழுதும் ஸ்தோத்திரம் செலுத்தி ஒரு ஜீவனுள்ள சாட்சியாக இருக்க விரும்புகிறேன் . நான் எப்போதும் இதை நான் விரும்பியபடி செய்யவில்லை என்றாலும், உமது சித்தத்தை செய்து உமக்கு மகிமையைக் கொண்டுவர என் வாயின் வார்த்தைகள், என் செயல்கள், என் இருதயம் மற்றும் என் மனதை அன்புடன் உமக்காக வழங்குகிறேன். பலவீனமும் வஞ்சகமும் உமது மகத்துவத்தை தொழுந்துகொள்ளும் பாக்கியத்தை பறித்துவிடாதபடி, தயவு செய்து, சகலவித கபடத்தையும் என் வாழ்விலிருந்து அகற்றுவதற்கு உமது பரிசுத்த ஆவியைப் பயன்படுத்துங்கள். என் கிருபையுள்ள கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து