இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் மீட்கப்பட்டதைப் போல வாழ்வோமாக ! நம் அன்றாட வாழ்வில் அன்பையும், நற்குணத்தையும் காண்பிப்போமாக .இயேசுவின் ஊழியத்தில் தேவனின் கிருபையைப் பற்றி கேள்விப்படாதவர்களுடன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு தீவிர முயற்சியை மேற்கொள்வோம், ஒருமித்த மனதுடனும் ஆவியுடனும், குறிப்பாக ஒன்றிணைந்து செயல்படுவோம். எதிர்ப்பை எதிர்கொண்டாலும், பின்வாங்கவோ அல்லது பிரிந்திருக்கவோ கூடாது.மாறாக, நற்செய்தியின் காரணத்திற்காக கைகோர்த்து செயல்படுவோம்.

என்னுடைய ஜெபம்

கர்த்தாவே, நாங்கள் உமது பிள்ளைகள் மற்றும் இயேசுவின் சீஷர்கள் என்பதை உலகுக்குக் காண்பிக்கும் வகையில், எங்களுக்கு அதிக நோக்கத்தையும், எதிர்ப்பின் மத்தியில் அதிக தைரியத்தையும் கொடுங்கள். நம்முடைய கர்த்தரும்,கிறிஸ்துவுமாகிய இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து