இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனானவர் பேசும் தேவனாய் இருக்கிறார் . அவர் நம்மை நேசிக்கிறார், அவருடைய செய்தியை வார்த்தைகளில் மூலமாய் நமக்கு அறிவிக்க தேர்ந்தெடுத்தார். முதலில் முற்பிதாக்களும் பெரிய தீர்க்கதரிசிகளும் இருந்தனர். பின்னர் வேதாகமத்தில் எழுதப்பட்ட பதிவு இருந்தது. ஆனால் தேவனின் மிகப் பெரிய செய்தி என்னவென்றால் , அவருடைய மிக வல்லமை வாய்ந்த வார்த்தைகள் உண்மையில் வெறும் வார்த்தைகள் அல்ல, அந்த வார்த்தை மாம்சமானார்,அவரே நாசரேத்தின் இயேசுவானவர் , அவர் கிறிஸ்துவும் அனைவருக்கும் ஆண்டவருமாக இருக்கிறார். அவருடைய திருச்சபையாகிய நமக்காக, அவர் விரும்புகிறபடி இருக்க, நாம் வேதத்தை மட்டும் நோக்கி பார்க்காமல், அவரையும் உற்று பார்க்க வேண்டும். பரிசுத்த வேதாகமம் என்ன கூறுகிறது , என்பதைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல் இயேசுவே, அதை கடைபிடித்து வாழவேண்டும் என்பதையும் அவர் மூலமாகவே அறிந்துக்கொள்ள முடியும்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள பிதாவே, நான் உம்முடைய வார்த்தையாகிய வேதாகமத்தை திறந்து, உமது சித்தத்தைப் புரிந்துகொள்ள முயலும்போது, ​​இயேசுவையும் அவருடைய கிரியைகளையும், நோக்கத்தையும் இன்னும் தெளிவாகப் பார்க்க எனக்கு உதவுங்கள். "இயேசு என்ன செய்திருப்பார்?" என்ற சிந்தனையோடே ஒவ்வொரு பதிலுக்கு மிக தெளிவான முடிவையும் நான் எடுக்கத்தக்கதாக , உம்முடைய பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பவும். என் ஆண்டவரும் இரட்சகருமான இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து