இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலம் நாம் இயேசுவின் குணாதிசயத்தில் நிலைத்திருக்கிறோம். பரலோகம் நமக்குள் வாழும் போது வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் பெரிதாக இருக்காது. யோவான் 14ல், நாம் அவருக்குக் கீழ்ப்படிந்தால், அவர் வந்து நம்மில் வாசம் செய்வார் , தம்மை நமக்கு வெளிப்படுத்துவார் என்பதை இயேசு நமக்கு நினைவூட்டினார். ஆகவே, நாம் அவருக்குக் கீழ்ப்படிவதால், நாம் அவரை நன்கு அறிவோம். அவருடைய ஜீவன் நமக்குள் மெய்யாகவே வாசம் செய்யும் .

என்னுடைய ஜெபம்

விலையேறப் பெற்ற ஆண்டவரே, நான் உமது வார்த்தைக்கும், உமது சித்தத்திற்கும், உமது முன்மாதிரிக்கும் கீழ்ப்படிய விரும்புகிறேன். உம்மை கனம் பண்ணவும் , உம்மை நேசிக்கவும், உம்மை அறியவும் நான் உமக்கு கீழ்ப்படிய விரும்புகிறேன். எனவே, உம்முடன் இணைந்து நான் மிகவும் நெருக்கமாக நடக்கும்போது, ​​உம்மை நன்கு அறிந்துகொள்ள எனக்கு உதவுங்கள். என் உலகில் உம் வாழ்க்கையை வாழ்வதன் அர்த்தம் என்ன என்பதை அறிய எனக்கு உதவுங்கள். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினிமித்தம் நான் ஜெபிக்கிறேன், என் கர்த்தராகிய அவருக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து