இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நான்கு சுவிசேஷங்களில் (மத்தேயு, மாற்கு , லூக்கா, யோவான்) நேரடியாக அல்லது மறைமுகமாக பல நாமங்களினால் இயேசு அடையாளம் காணப்படுகிறார். குழந்தை , குமாரன், இயேசு, மகா பெரியவர், உன்னதமானவரின் குமாரன், ராஜா, தாவீதின் குமாரன் மற்றும் யூதர்களின் ராஜா இவ்வாறெல்லாம் இயேசு அடையாளம் காணப்படுகிறார் என்பதைக் கவனியுங்கள். இயேசுவானவர் அனைத்து விளக்கங்களையும் முறியடித்து அடிமையின் ரூபமெடுத்து மனிதனாக வந்ததன் மூலமாக தாழ்மையை தேர்ந்தெடுத்தார். ஆனால் இந்தஅநேக நாமங்கள் மற்றும் விளக்கங்கள் நமக்கு இயேசுவை நம் இரட்சகராகக் நம்முடைய ஒவ்வொரு சோதனையிலும் ஆசீர்வாதத்திலும் கண்டுபிடிக்க அவைகள் உதவுகிறது. எல்லா காலங்களிலும் இயேசுவே இரட்சகர்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் மற்றும் சர்வவல்லமையுள்ள பிதாவே, இயேசுவை விவரிக்கப்பட்ட அனைத்து வழிகளுக்கும் அவருக்கு வழங்கப்பட்ட அனைத்து நாமங்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். அவருடைய அன்பின் அகலத்தையும், அவருடைய குணத்தின் ஆழத்தையும் பார்க்க அவை எனக்கு உதவுகின்றன. இயேசுவின் ஊழியத்தின் பரிமாணத்தையோ அல்லது இயேசுவின் நாமத்தையோ அல்லது விளக்கத்தையோ நான் எப்பொழுதும் கண்டுபிடித்து என்னை நிலைநிறுத்த அவைகள் உதவும். பொல்லாங்கனால் ஏற்படும் சந்தேகத்தின் நிழல்களில் நான் நடக்கும்போது. பிதாவே, இயேசுவைக் காண எனக்கு உதவும் , என்னுடைய தனிப்பட்ட காரியங்களில் மற்றும் என் பாகுபாடுகளினால் அல்ல, அப்பொழுது அவர் மீண்டுமாய் வரும்போது, ​​நான் அவரை அறிவேன், அவர் என்னை அறிவார். இரட்சகரின் மகிமையான நாமத்தின் மூலம் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து