இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு "செய்ய வேண்டியிருந்தது" என்று பரிசுத்த வேதாகமம் கூறும் சில விஷயங்கள் உள்ளன. நம்மைப் போல் மாறுவது என்ற காரியம் மிகவும் முக்கியமாக செய்ய வேண்டிய ஒன்று ! இயேசு நம்மில் ஒருவராகவும், நம்முடன் இருக்கிறவராகவும் , நம்மைப் போன்றவராகவும் இருக்க வேண்டும். இயேசுவானவர் எல்லா வகையிலும் நம்மைப் போல இருக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்தார் என்பதைக் கவனியுங்கள். அது ஏன் முக்கியம்? ஆகவே, அவர் பரிபூரண மற்றும் உண்மையுள்ள பிரதான ஆசாரியராக இருக்க முடியும், அவர் நம்முடைய பாவங்களுக்கான ஜீவ பலியாக மட்டுமல்லாமல், நாம் முழுமையாக நம்பக்கூடிய ஒருவராகவும் இருக்க முடியும், ஏனென்றால் அவர் நம்மைப் போலவே பாடுபட்டதினால், நம் பாவம் நிறைந்த உலகில் போராடுவதை அவர் புரிந்துக் கொள்கிறார். இப்போது நாம் இதை அறிந்திருக்கிறோம், இயேசு நமக்காக பரிந்து பேசுவார் என்று விசுவாசிக்கலாம் ! அவர் தேவனுடைய குமாரன் என்பதாலும், அனைத்தையும் அறிந்தவர் என்பதாலும் மாத்திரமல்ல, அவர் நமது அழிந்து போகிற உலகில் உள்ள சவால்கள், வலிகள், சிரமங்கள், சோதனைகள் மற்றும் கஷ்டங்கள் இவை யாவற்றையும் அவர் உலக வாழ்க்கையிலும் கடந்து வந்திருப்பதாலும், மரணத்துடனான நமது போராட்டங்களை அவர் அறிந்திருக்கிறார் என்பதில் நாம் முழு நம்பிக்கையுடன் இருக்க முடியும். அவர் மாம்சத்தில் வெளிப்பட்டதினால் தன்னுடைய ஜீவியத்தில் எல்லாவற்றையும் அனுபவித்தார் (எபிரேயர் 2:14-18, 4:14-16).

என்னுடைய ஜெபம்

பிதாவாகிய தேவனே உமக்கு ஸ்தோத்திரம், உம்முடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய அபாரமான தியாகத்திற்காக நன்றி, அதனால் நான் எங்கள் பிதாவாகிய தேவனுடைய குடும்பத்தில் புத்திரசுவீகாரமாக்கப்பட்டு , உம் நித்திய குடும்பத்தில் உம்முடைய இளைய உடன்பிறந்த சகோதரனாக /சகோதரியாக ஆக முடியும். எங்கள் மீதான உமது அன்பினால் தூண்டப்பட்டு, பிதாவினுடைய உண்மைத்தன்மையின் மூலம் நிறைவேற்றப்பட்ட இந்த கிருபைக்காக நன்றி. கர்த்தராகிய இயேசுவே, உமது நாமத்தின் அதிகாரத்தின் மூலம், நான் உமக்கு என் துதியையும் நன்றியையும் செலுத்துகிறேன், உம்மை விசுவாசித்து ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து