இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய ஆச்சரியமான கிருபையை அனுபவித்தவர்களான யோசேப்பு மற்றும் மரியாள் என்பவர்களுடனே வரும் நாட்களில் நாம் பயணிப்போம். இவ் வசனங்கள் நமக்கு அடிப்படையான காரியங்களை விவரிக்கிறது: அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து தெற்கே ஒரு பயணத்தை மேற்கொண்டனர், அவர்கள் தாவீது இராஜாவின் நகரமான பெத்லகேமுக்குச் சென்றனர், அவர்கள் "திருமணத்திற்காக நியமிக்கப்பட்டவர்கள் " அல்லது திருமணத்திற்கு நிச்சயமானவர்கள் , ஆனால் இன்னும் முழுமையாக திருமணம் செய்து கொள்ளவில்லை, மரியாளோ கர்ப்பமாக இருந்தார், மேலும் அவர்கள் ரோமானிய அரசாங்கத்தில் குடிமதிப்பெழுதப்படும்படி அங்கு சென்றனர். இந்த வெளியரங்கமான குடிமதிப்பெழுதுதலின் போது சூழ்ச்சி மற்றும் தவறான காரியங்களின் அதிர்வலைகள் உண்டாயிருந்தன. வாக்குதத்தமும் அதின் நிறைவேறுதலும் ஒன்றோடுஒன்று பலமாய் இணைந்திருந்தது. புயலின் மத்தியிலும் விசுவாசம் நிரூபிக்கப்பட்டது. ரோமானிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் அன்றாட மக்களுக்கு ஒரு உண்மையான வரலாற்று சூழல் உருவாக்கப்படுகிறது. ஊழல், வாக்குறுதி, விசுவாசம் மற்றும் வரலாறு ஒன்றோடு ஒன்று சந்திக்கின்றன . நமது நம்பிக்கையும் கனவுகளும் ஊழலினாலும் சூழ்ச்சியினாலும் பாதிக்கிறது - இவ் உலகத்திலே நாம் இருக்கும் சூழ்நிலையிலே இயேசுவானவர் பிரவேசிக்கிறார். அவர் ஜனங்களின் மேசியாவாக இருப்பார்.அவர் பிறப்பதற்கு முன்பே நாம் அதை அறிவோம். அது அவரை அதிகமாக நேசிக்கவும் பாராட்டவும் செய்கிறது. தேவன் நம்மை போல ஒருவராக நம் உலகிலே பிரவேசிக்கும்படியாய் தெரிந்தெடுத்தார், வேறு இடத்திலிருந்து வரும் சில மாசற்ற மற்றும் தீண்டப்படாத அன்னியராக அல்ல. இது நாம் அடையக்கூடிய மற்றும் பின்பற்றக்கூடிய ஒரு மேசியாவாக வருகிறார் . இந்த இயேசுவானவர் நம்மில் ஒருவராக இருக்கிறார் .

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், அன்பும் நிறைந்த தேவனே, இயேசுவானவரை ஈவாக தந்தமைக்காக உமக்கு நன்றி. அனைத்து முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்களுடன் அவர் நமது குழப்பம் நிறைந்த உலகில் நுழைந்ததற்கு நன்றி.எங்கள் போராட்டங்களில் இருந்து ஒதுங்கியோ அல்லது விட்டு விலகாமலும் இருந்ததற்கு நன்றி. இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து