இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பவர் அல்ல . இதைகுறித்த பொய்யான செய்தியை சாத்தான் நீண்ட காலத்திற்கு முன்பே ஆரம்பித்துவிட்டான் என்பது நமக்கு தெரியும், ஆனால் தயவு செய்து அவனுடைய பொய்களை நம்பாதீர்கள் ! தமது மாணவர்கள் தோல்வியடைவதால் அவர்களை விரட்டும் கொடூரமான ஆசிரியர் தேவன் அல்ல. தேவன் தம்மை தேடி வருபவர்களை அவமானப்படுத்தவும், மனிதாபிமானமில்லாமலும், தண்டிக்கவும் பார்க்கிற மோசமான நியாயாதிபதியும் அல்ல. நமது குறைபாடுகளைப் பற்றி பரலோகத்தில் மற்றவர்களிடம் வதந்தி பரப்புபவர் அல்ல . ஒரே மெய்யான மற்றும் ஜீவனுள்ள தேவன் தமது இரட்சிப்பின் மூலம் நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிறார். அவர் தமது இரக்கத்தையும், கிருபையையும் நம்மிடையே உதாரத்துவமாக வழங்க விரும்புகிறார். நாம் அவருடைய அன்பு பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இருப்பினும், தேவன் பரிசுத்தமானவர், நீதியுள்ளவர், மகத்துவமானவர், சத்தியமானவர் . ஆகவே, நம்மீது தேவனுடைய கிருபையான விருப்பம் நம்மில் நீதியான குணங்களைக் காண வேண்டும் என்ற அவரது அழைப்போடு ஒன்றுசேரும் போது , ​​ஒரே ஒரு தீர்வு தான் இருக்கிறது. தேவனின் நீதியான கோரிக்கைகளை தம்முடைய கிருபையின் மூலம் நிறைவேற்ற இயேசு வந்தார். நம்மைப் போன்ற பாவிகளைக் காப்பாற்ற தேவன் இயேசுவை அனுப்பினார். எல்லா தேசங்களையும் , இனங்களையும், கலாச்சாரங்களையும் சேர்ந்த மக்களை பாவத்திலிருந்தும் பாவத்தின் தண்டனையிலிருந்தும் இரட்சிக்கவே இயேசுவானவர் வந்தார். இயேசு நம்மைக் இரட்சிக்கவே வந்தார் மாறாக நம்மைக் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படியல்ல !

என்னுடைய ஜெபம்

தேவனே, நான் உம்மை துதிக்கிறேன், உம் சித்தத்தின் படி என்னைக் இரட்சியும். என்னிடமிருந்து பரிசுத்தத்தை விரும்பினதற்காக உமக்கு நன்றி. என் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் , பாரமாக இருக்கக்கூடாது என்பதற்காக என்னை நீதிக்கு அழைத்ததற்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். என்னுடைய நற்கிரியைகளினால் மற்றவர்கள் உமது மகிமையைக் காணும் வகையில், உம் பரிசுத்த குணம் கொண்டதாக இருக்க அடியேனை உற்சாகப்படுத்தியதற்காக நன்றி. பிதாவே, எனவே தயவுக்கூர்ந்து என்னை எடுத்து பயன்படுத்தியருளும் . நான் குறைபாடுள்ளவன் என்பதை நான் அறிவேன், ஆனால் நான் உமக்காக பிரயோஜனமுள்ள கருவிகளில் ஒன்றாக இருக்க விரும்புகிறேன், காணாமற்போன மக்களுக்கு இயேசுவின் இரக்கம் மற்றும் கிருபையைப் பற்றி தெரியப்படுத்துகிறேன். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து