இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

துவக்கம் முதல் முடிவுபரியந்தம் நம்முடைய தேவன் நம்மோடு இருக்கிறார்! நாம் பயப்படுவதற்கு என்ன காரியம் இருக்கிறது? இந்த ஒரு மறுக்க முடியாத யதார்த்தத்தை மாற்ற என்ன காரியம் நடக்க முடியும் ? என்றென்றும் இருப்பவரும், எப்பொழுதும் நம்மைக் கவனித்துக்கொள்பவரும், நமக்கு ஜீவனையும் இரட்சிப்பையும் தருவதற்கு எப்பொழுதும் கிரியை செய்யும் தேவனுக்கு நாம் யாவரும் சொந்தமானவர்கள்! நாளையோ, மறுநாளோ, அதற்குப் பின்னரோ நமக்கு என்ன நடந்தாலும், அல்பாவும் ஒமேகாவுமாய் இருக்கிறவிடம் நம் வாழ்க்கையின் முடிவு இருக்கிறது, அவர் ஆதி முதல் அந்தம் வரை ஜீவித்திருப்பவர், அவரிடமே நம்முடைய முடிவில்லாத வாழக்கை பாதுகப்பாய் இருக்கிறது .

என்னுடைய ஜெபம்

தேவனே , கடந்த ஆண்டின் ஆசீர்வாதங்களுக்காக உமக்கு நன்றிசெலுத்துகிறேன் . வரவிருக்கும் ஆண்டில் உம் ஆசீர்வாதங்களைப் பயன்படுத்த நான் முயலும்போது தயவுசெய்து எனக்கு வழிகாட்டவும். என்னைக் குறித்த உமது எதிர்காலத்திட்டம் பற்றிய நம்பிக்கையை எனக்காக ஊக்குவித்து, உமது இரட்சிப்பின் காரணமாக என்னை மகிழ்ச்சியினால் நிரப்பும். நல்லது, பரிசுத்தமானது, கிருபையானது ஆகிய அனைத்திற்காகவும் , நான் உமக்கு நன்றியையும் ஸ்தோத்திரங்களையும் செலுத்துகிறேன். நான் செய்த பாவம், தோல்வியடைந்த நேரம் அல்லது தடுமாறிய எல்லா வழிகளுக்காகவும் , நான் உம்மிடம் மன்னிப்பு கேட்கிறேன். நாளைக்காகவும், இன்னொரு புதிய நாளுக்காகவும், மற்றொரு புத்தாண்டிற்காகவும், நான் எதிர்பார்ப்புடனும் மகிழ்ச்சியுடனும் காத்திருக்கிறேன், ஏனென்றால் அவைகள் வருவதை நான் பார்ப்பேன் அல்லது நாட்கள் மற்றும் வருஷங்கள் இல்லாத உம் நித்திய வீட்டில் நான் இருப்பேன் என்று எனக்குத் தெரியும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து