இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்கள் இருதயத்தை எங்கு வைத்திருக்கிறீர்கள்? எவைகளை மேன்மையாய் கருதுகிறோமோ அங்கே நம்முடைய இருதயத்தை கண்டுபிடிக்கலாம். எனவே இது ஒரு முக்கியமான கேள்வி. இப்பொழுதும் நீங்கள் உங்களுடைய பொக்கிஷங்களையும், அதிகாரங்களையும், பாதுகாவலையும், இன்னுமாய் உறவுகளையும் சேர்த்துவைக்கலாம். நம்மில் பெரும்பாலோர் நம் பொக்கிஷங்களாக வைத்திருக்கும் விஷயங்களை விட்டுக்கொடுப்பதின் மூலம் மாத்திரமே உண்மையான பொக்கிஷங்கள் எது என்பதைக் கண்டுபிடிப்போம் என்று இயேசுவானவர் நமக்கு நினைப்பூட்டுகிறார்.

என்னுடைய ஜெபம்

மகத்துவமுள்ள பிதாவே, உமது கிருபையின் ஐசுவரியத்திலிருந்து உம்மில் என்னுடைய பொக்கிஷத்தைக் கண்டறியவும், உமக்கு மேலே வேறெதையும் பொக்கிஷமாகக் கொள்ளாமல் இருக்கவும் நீர் எனக்கு உதவ வேண்டும் என்று ஜெபிக்கிறேன். இன்று, நான் எப்படி இருக்கிறேனோ, அப்படியே எல்லாவற்றையும் உமக்கு காணிக்கையாக கொடுத்து, அதினால் என்னுடைய வாழ்க்கை உமது மகிமைக்காக வாழ வேண்டும் என்று விரும்புகிறேன் . என் மாதிரியும், பொக்கிஷமுமான இயேசுவின் நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து